காலநதி /வளவ. துரையன்

3-2-23 விருட்சம் கவியரங்கில் வாசித்தது.

காலநதி நீண்ட காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
கும்பமேளாபோல் எல்லாரும் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். விதியெனும் கொடியோன் தள்ளியதால் வீழ்ந்தேன்.

திமிங்கிலங்கள்
சுறாமீன்கள் இடையே நடுநதியில் தத்தளிக்கிறேன்.

காப்பாற்றுகிறேன் என்று கைகளை நீட்டியவர்களின் கரங்களெல்லாம் கழுத்தை நெரிக்க வருவதைக் கண்கூடாகப் பார்த்தும் நான் கதியே எனக் கிடக்கிறேன்.

நம்பிக்கைத் துடுப்பால் ஊசலாடுகிறேன்.

வானத்தில் தெரியும் புள்ளியைப் பார்த்தும் வட்டமிடும் புட்களைக் கண்டும் நெஞ்சின் ஓரத்தில் நீண்ட பூ பூக்கிறது.

அதிருஷ்டப் படகொன்று வருமென்று ஆறுதல்கள் கூறுகிறார்கள். வேண்டாம். வேண்டாம்.

உழைப்பும் துணிவுமென்ற இரு கைகள் நீச்சலால் உலகையே வென்றிடுவேன்.