இலக்கியப் படைப்புகளும் நானும்/ஸிந்து ஜா

படிக்க ஆரம்பித்தது 12/13 வயதில். குடியிருந்த கட்டிடத்தில் எட்டு வீடுகள்.ஒவ்வொருவர் வீட்டிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் கலைமகள் அமுதசுரபி, சுதேசமித்திரன், என்று ஏதாவது ஒரு இதழ் வாங்கி விடுவார்கள். எங்கள் வீட்டில் ஒன்றும் வாங்கவில்லை. பையன் ஐஏஎஸ் படிப்பு கெட்டுப் போய் விடுமாம். ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் அல்லது வீட்டுக்குள் போயும் படித்தால்தான் ஆயிற்று என்று அலையும் பிராயம். இந்த இதழ்கள் மூலம் பரிச்சய
மானவர்கள்தாம், கல்கி, தேவன், நா.பார்த்தசாரதி, அகிலன்,எஸ்ஏபி, சாண்டில்யன்,ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, அநுத்தமா, ரா.கி.ரங்கராஜன், ஆகியோர்.
இவர்கள் எனக்குப் பள்ளிப்படிப்புக்கு அப்பால் உள்ள புத்தகப் படிப்பின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தினார்கள் என்று சொல்வதில் ஒரு கஷ்டமும் இல்லை. இவர்களைப் படிக்காமல் இருந்திருந்தால் அதற்கு அடுத்த ஸ்டெப்புக்கு நான் போயிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.இவர்கள் பெயர்களை உச்சரிக்க மறுப்பது மூலம் தமது இலக்கிய பீடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டதாக நினைப்பவர்களும், வெகுஜன எழுத்து என்று நிராகரிப்பதன் மூலம் ஓர் இலக்கிய அந்தஸ்து கிட்டி விட்டதாக நினைப்பவர்களும் இருப்பதை நான் காண்கிறேன். ஏ ஃபார் ஆப்பிள் படிக்காமல் ஷேக்ஸ்பியரில் ஆரம்பித்து விட்ட கருவிலேயே திருவுடையவர்கள்
கல்லூரியில் படிக்கும் போதும் அதற்குப் பின்னரும் நான் சென்றடைந்தது தீபம், கணையாழி, எழுத்து, தாமரை,நடை, கசடதபற, பிரக்ஞை சதங்கை, வாசகன், கண்ணதாசன், மேகலா, நவீன விருட்சம், அம்ருதா, கனவு, அந்திமழை, இருவாட்சி மற்றும் இணைய இதழ்களான திண்ணை, வல்லமை, சொல்வனம், மலைகள், நடு ஆகியவை. இந்த உத்வேகத்தின் விளைவாக நான் பரிச்சயம் கொண்டு என் வாசக, மற்றும் எழுத்தாக்க விரிவை செயல் படுத்தும் ஊக்கிகளாக தி. ஜானகிராமன், கு.ப.ரா., சி.சு செல்லப்பா, வெங்கட் சாமிநாதன்,க.நா.சு., புதுமைப்பித்தன், அழகிரிசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா., நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், இந்திரா பார்த்தசாரதி, காஸ்யபன், சி. மணி, பிரமிள், வைதீஸ்வரன், கி.ரா., அசோகமித்திரன் ஆகியோரைக் கண்டேன். ( இப்போதைக்கு இவர்கள். ஆனால் இது ஒரு முடிவில்லாத பெரிய லிஸ்ட்.)
அறுபதுகளின் இறுதியில் எழுத்துவில் சில கவிதைகளும், தீபத்தில் சில கட்டுரைகளும் பிரசுரம் ஆயின. மதுரையில் நான் நடத்தி வந்த மதுரை இலக்கிய வட்டத்தின் மூலம் எழுத்தாளர்களின் பரிச்சயங்கள் ஏற்பட்டன. ந. சிதம்பரசுப்பிரமணியனின், நா.பாவின் சுஜாதாவின் நாவல்கள் பற்றிய இலக்கிய வட்ட விவாதங்கள் எழுத்துவிலும்,
தீபத்திலும்,கணையாழியிலும் கசடதபறவிலும் வெளியாகின. என் முதல் சிறுகதை கணையாழியில் எழுபதுகள் ஆரம்பத்தில் வெளியாகியது. இலக்கியப் பத்திரிகைகளில் வந்த சிறுகதைகளும்,கட்டுரைகளும், கவிதைகளும் அதுவரை அறிமுகமாகியிராத புதிய உலகத்தைக் காண்பித்ததுதான் உண்மை. தீபத்தில் வந்த மூன்று முக்கியமான பகுதிகள் -நானும் என் எழுத்தும் என்ற எழுத்தாளர்களின் கட்டுரை, இலக்கியச் சந்திப்பே – நேர்காணல் மற்றும் தவறாமல் ஒவ்வொரு மாதமும் வெளியான பிறமொழிச் சிறுகதைகள். இவை இதழின் தரத்தை உயர்த்தியதோடு மட்டுமின்றி வாசகர்களின் இலக்கியத் தேடல்களை ஒரு பறந்து பட்ட உலகத்தைக் காண்பித்துக் கொடுத்தது. மேலே குறிப்பிட்ட சிறு பத்திரிகைகளில் சிலவற்றில் என் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வர ஆரம்பித்தன.
1971-72ல் பிரச்சினை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு, என்னைப் பாதித்தது. நாம் உயர்ந்தது, உயர்ந்தவர்கள் என்று நினைத்தவை அல்லது நினைத்தவர்கள் அவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்று தப்பாக நினைத்து விட்டோம் என்ற ஏமாற்றம் என்னைச் சூழ்ந்தது. அதற்கடுத்த சில மாதங்களில் நான் அதிகமாகப் பொது வெளியில் என்னைக் காண்பித்துக் கொள்வதை நிறுத்தி விட்டேன்.முப்பதுவருஷங்
களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்தது.
ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பதை ஒவ்வொரு வாசகனும் தன் அளவில் அவனது அளவுகோல்களை வைத்துத்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த அளவுகோல்களை வாசகப் பயிற்சி மூலமும், சிந்தனையின் ஆழம் மூலமும் அவன் கண்டடைகிறான். குழு மனப்பான்மையில் அடையும் சுதந்திரமற்ற, சமரசம் நிறைந்த முடிவுகளை அவனே பின்னாளில் நிராகரிக்கும் சூழ்நிலை உண்டாகும் வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில் குழு கண்டெடுத்த முத்து குழு உடைந்த அல்லது மறைந்த பின் வெறும் சங்காகத் தரையில் கிடப்பதை அவன் பார்க்க முடியும். குழுச் செயல்கள் விளம்பரம் தேடுபவை. அவ்விளம்பரத்தின் முடிவு தரும் ஒருவித சந்தோஷம் தனக்கு கிடைத்து விட்ட அங்கீகாரத்தின் எதிரொலி என்று தவறாக நினைத்துக் கொள்கிறது. எமிலி டிக்கின்சன் சொன்னது போல Publication is not the business of the poet. Being a poet is all, being known as poet is nothing .
ஒரு எழுத்தாளனின் முதல் அல்லது இரண்டாவது படைப்பில் வெளிப்படும் வித்தியாசமான உள்ளடக்கம், வாசகர் இதுவரை பரிச்சயம் கொண்டிராத சமூக நிலைமைகள், பேச்சு வழக்குகள், தீவிரம் நிரம்பிய உரைநடையின் வீச்சு ஆகியவை இவ்வெழுத்துக்களை வாசகர் தம் கவனத்தில் நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள வைக்கின்றன..தி. ஜானகிராமனின் மோகமுள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், ஹெப்சிபா ஜேசுதாசின் புத்தம் வீடு, நீல பத்மநாபனின் தலைமுறைகள், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, பாவை சந்திரனின் நல்ல நிலம், சிவகாமியின் ஆனந்தாயி அநுத்தமாவின் கேட்டவரம் , வெங்கட் சாமிநாதனின் பாலையும் வாழையும், சோ. தர்மனின் கூகை, ஆகியவை அதுவரை தமிழ் இலக்கிய உலகில் காணப்படாத நடையையும், உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தன. இத்தகைய எழுத்துக்கள் உரத்த குரலைத் தவிர்த்து அதிகம் உள்ளடங்கிய குரலாகத் தம்மை வெளிப்படுத்தின அதற்கு முன்னால் காணப்படாததாகவும் அதனாலேயே அவற்றின் தீவிர வாசகர் கவனத்தை அவை பெறுவதாகவும் விளங்கின.
எந்த ஒரு சீரிய படைப்பும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள எழுத்தாளரின் தரிசனத்தை அது வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புதுமைப்பித்தன் “சாமியாரும், குழந்தையும்” சிறுகதையில் எழுதுகிறார்:
“சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும் போது ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் பட்டு சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் துளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.
லா.ச.ரா. : “நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போக வேண்டும்.
தி.ஜானகிராமன் நளபாகத்தில்
:”ம்.உக்காந்து பேசுங்க. ம் அப்துல் மஜீது. ஆக்ராவில் அழைச்சுண்டு போக அப்துல் மஜீது. இந்தி கிந்தியெல்லாம் நன்னாப் பேசுவேள்னு சொல்லுங்கோ.”
“வாங்க நீங்க. தில்லக்கேணி இந்திதான் பேசுவேன். வாங்க. நானும் வந்து அஞ்சு வருஷமாச்சே. ஊர்க்கதையெல்லாம் தலைகீழ்ப் பாடம். தமிழ் கைடாவே ஆயிட்டேன்.
“போடு சாம்பிராணி…அப்ப கவலையில்லே. கிளம்பு. நல்லூரம்மா கிளம்புங்கோ. நாயுடு பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கா. அதெல்லாம் தில்லி, ஹரித்வார்னு பாத்துப்பம். இப்ப குத்தாலம் கார்ல போகலாம். மஜீத் சார், இவங்க நமக்கு ரொம்ப காலமா குடும்ப சிநேகிதம். நல்லூரு.”
“நல்லூரா ..அதுவும் நம்ம தங்கச்சி ஊரு கிட்டேதான் . நம்ம தங்கச்சியைப் பக்கத்திலேதான் கொடுத்திருக்கு. மதுக்குடியிலே.”
“எல்லாம் பக்கம்தான். இந்த ஊர்லேந்து நம்ம ஊர்களைப் பாரும். எல்லாம் கிட்டக் கிட்டத்தான் தெரியும். தஞ்சாவூர், த்ருஷ்ணாப்பள்ளி ரெண்டும் பக்கத்திலே பக்கத்திலே தெரியும். அக்ரகாரம், பள்ளத் தெரு ரண்டும் ஒட்டிண்டிருக்காப்பிலே இருக்கும். தூரக்கப் போயிடனும். அவ்வளவுதான்”என்று முத்துசாமி திறந்த கார் கதவைப் பிடித்துக் கொண்டு ஏறினார்.
சுந்தர ராமசாமி புளிய மரத்தின் கதையில்…
“ஆனால் புளிக்குளத்தை ஒட்டிய தனது மதியத்தூக்கத்துக்கான இடமான காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்படும் கோரத்தை காண்பதற்கு முன்பே ஆசான் விடைபெற்றுக் கொள்கிறார். தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பூங்கா அமைக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு, செடிகள் நடப்படுகின்றன.
‘மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்’ என்கிறார் வயோதிக நாடார்.
‘அளகுக்கு” என்கிறான் இளைஞன்.
செடிதான் அளகாட்டு இருக்குமோ?’
‘உம்’
செடி மரமாயுடாதோவ்
‘மரமாட்டு வளராத செடிதான் வெப்பாங்க. இல்லை, வெட்டி வெட்டி விடுவாங்க’
‘அட பயித்தாரப் பயலுகளா!’
இலக்கியப் படைப்புகளும் நானும்
படிக்க ஆரம்பித்தது 12/13 வயதில். குடியிருந்த கட்டிடத்தில் எட்டு வீடுகள்.ஒவ்வொருவர் வீட்டிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் கலைமகள் அமுதசுரபி, சுதேசமித்திரன், என்று ஏதாவது ஒரு இதழ் வாங்கி விடுவார்கள். எங்கள் வீட்டில் ஒன்றும் வாங்கவில்லை. பையன் ஐஏஎஸ் படிப்பு கெட்டுப் போய் விடுமாம். ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் அல்லது வீட்டுக்குள் போயும் படித்தால்தான் ஆயிற்று என்று அலையும் பிராயம். இந்த இதழ்கள் மூலம் பரிச்சயமானவர்கள்தாம், கல்கி, தேவன், நா.பார்த்தசாரதி, அகிலன்,எஸ்ஏபி, சாண்டில்யன்,ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, அநுத்தமா, ரா.கி.ரங்கராஜன், ஆகியோர்.
இவர்கள் எனக்குப் பள்ளிப்படிப்புக்கு அப்பால் உள்ள புத்தகப் படிப்பின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தினார்கள் என்று சொல்வதில் ஒரு கஷ்டமும் இல்லை. இவர்களைப் படிக்காமல் இருந்திருந்தால் அதற்கு அடுத்த ஸ்டெப்புக்கு நான் போயிருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.இவர்கள் பெயர்களை உச்சரிக்க மறுப்பது மூலம் தமது இலக்கிய பீடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டதாக நினைப்பவர்களும், வெகுஜன எழுத்து என்று நிராகரிப்பதன் மூலம் ஓர் இலக்கிய அந்தஸ்து கிட்டி விட்டதாக நினைப்பவர்களும் இருப்பதை நான் காண்கிறேன். ஏ ஃபார் ஆப்பிள் படிக்காமல் ஷேக்ஸ்பியரில் ஆரம்பித்து விட்ட கருவிலேயே திருவுடையவர்கள்
கல்லூரியில் படிக்கும் போதும் அதற்குப் பின்னரும் நான் சென்றடைந்தது தீபம், கணையாழி, எழுத்து, தாமரை,நடை, கசடதபற, பிரக்ஞை சதங்கை, வாசகன், கண்ணதாசன், மேகலா, நவீன விருட்சம், அம்ருதா, கனவு, அந்திமழை, இருவாட்சி மற்றும் இணைய இதழ்களான திண்ணை, வல்லமை, சொல்வனம், மலைகள், நடு ஆகியவை. இந்த உத்வேகத்தின் விளைவாக நான் பரிச்சயம் கொண்டு என் வாசக, மற்றும் எழுத்தாக்க விரிவை செயல் படுத்தும் ஊக்கிகளாக தி. ஜானகிராமன், கு.ப.ரா., சி.சு செல்லப்பா, வெங்கட் சாமிநாதன்,க.நா.சு., புதுமைப்பித்தன், அழகிரிசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா., நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், இந்திரா பார்த்தசாரதி, காஸ்யபன், சி. மணி, பிரமிள், வைதீஸ்வரன், கி.ரா., அசோகமித்திரன் ஆகியோரைக் கண்டேன். ( இப்போதைக்கு இவர்கள். ஆனால் இது ஒரு முடிவில்லாத பெரிய லிஸ்ட்.)
அறுபதுகளின் இறுதியில் எழுத்துவில் சில கவிதைகளும், தீபத்தில் சில கட்டுரைகளும் பிரசுரம் ஆயின. மதுரையில் நான் நடத்தி வந்த மதுரை இலக்கிய வட்டத்தின் மூலம் எழுத்தாளர்களின் பரிச்சயங்கள் ஏற்பட்டன. ந. சிதம்பரசுப்பிரமணியனின், நா.பாவின் சுஜாதாவின் நாவல்கள் பற்றிய இலக்கிய வட்ட விவாதங்கள் எழுத்துவிலும்,
தீபத்திலும்,கணையாழியிலும் கசடதபறவிலும் வெளியாகின. என் முதல் சிறுகதை கணையாழியில் எழுபதுகள் ஆரம்பத்தில் வெளியாகியது. இலக்கியப் பத்திரிகைகளில் வந்த சிறுகதைகளும்,கட்டுரைகளும், கவிதைகளும் அதுவரை அறிமுகமாகியிராத புதிய உலகத்தைக் காண்பித்ததுதான் உண்மை. தீபத்தில் வந்த மூன்று முக்கியமான பகுதிகள் -நானும் என் எழுத்தும் என்ற எழுத்தாளர்களின் கட்டுரை, இலக்கியச் சந்திப்பே – நேர்காணல் மற்றும் தவறாமல் ஒவ்வொரு மாதமும் வெளியான பிறமொழிச் சிறுகதைகள். இவை இதழின் தரத்தை உயர்த்தியதோடு மட்டுமின்றி வாசகர்களின் இலக்கியத் தேடல்களை ஒரு பறந்து பட்ட உலகத்தைக் காண்பித்துக் கொடுத்தது. மேலே குறிப்பிட்ட சிறு பத்திரிகைகளில் சிலவற்றில் என் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வர ஆரம்பித்தன.
1971-72ல் பிரச்சினை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு, என்னைப் பாதித்தது. நாம் உயர்ந்தது, உயர்ந்தவர்கள் என்று நினைத்தவை அல்லது நினைத்தவர்கள் அவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்று தப்பாக நினைத்து விட்டோம் என்ற ஏமாற்றம் என்னைச் சூழ்ந்தது. அதற்கடுத்த சில மாதங்களில் நான் அதிகமாகப் பொது வெளியில் என்னைக் காண்பித்துக் கொள்வதை நிறுத்தி விட்டேன். முப்பதுவருஷங்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்தது.
ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பதை ஒவ்வொரு வாசகனும் தன் அளவில் அவனது அளவுகோல்களை வைத்துத்தான்
தீர்மானிக்க வேண்டும். இந்த அளவுகோல்களை வாசகப் பயிற்சி மூலமும், சிந்தனையின் ஆழம் மூலமும் அவன் கண்டடைகிறான். குழு மனப்பான்மையில் அடையும் சுதந்திரமற்ற, சமரசம் நிறைந்த முடிவுகளை அவனே பின்னாளில் நிராகரிக்கும் சூழ்நிலை உண்டாகும் வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில் குழு கண்டெடுத்த முத்து குழு உடைந்த அல்லது மறைந்த பின் வெறும் சங்காகத் தரையில் கிடப்பதை அவன் பார்க்க முடியும். குழுச் செயல்கள் விளம்பரம் தேடுபவை. அவ்விளம்பரத்தின் முடிவு தரும் ஒருவித சந்தோஷம் தனக்கு கிடைத்து விட்ட அங்கீகாரத்தின் எதிரொலி என்று தவறாக நினைத்துக் கொள்கிறது. எமிலி டிக்கின்சன் சொன்னது போல Publication is not the business of the poet. Being a poet is all, being known as poet is nothing .
ஒரு எழுத்தாளனின் முதல் அல்லது இரண்டாவது படைப்பில் வெளிப்படும் வித்தியாசமான உள்ளடக்கம், வாசகர் இதுவரை பரிச்சயம் கொண்டிராத சமூக நிலைமைகள், பேச்சு வழக்குகள், தீவிரம் நிரம்பிய உரைநடையின் வீச்சு ஆகியவை இவ்வெழுத்துக்களை வாசகர் தம் கவனத்தில் நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள வைக்கின்றன..தி. ஜானகிராமனின் மோகமுள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், ஹெப்சிபா ஜேசுதாசின் புத்தம் வீடு, நீல பத்மநாபனின் தலைமுறைகள், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, பாவை சந்திரனின் நல்ல நிலம், சிவகாமியின் ஆனந்தாயி அநுத்தமாவின் கேட்டவரம் , வெங்கட் சாமிநாதனின் பாலையும் வாழையும், சோ. தர்மனின் கூகை, ஆகியவை அதுவரை தமிழ் இலக்கிய உலகில் காணப்படாத நடையையும், உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தன. இத்தகைய எழுத்துக்கள் உரத்த குரலைத் தவிர்த்து அதிகம் உள்ளடங்கிய குரலாகத் தம்மை வெளிப்படுத்தின அதற்கு முன்னால் காணப்படாததாகவும் அதனாலேயே அவற்றின் தீவிர வாசகர் கவனத்தை அவை பெறுவதாகவும் விளங்கின.
எந்த ஒரு சீரிய படைப்பும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள எழுத்தாளரின் தரிசனத்தை அது வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புதுமைப்பித்தன் “சாமியாரும், குழந்தையும்” சிறுகதையில் எழுதுகிறார்:
“சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும் போது ஓய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் பட்டு சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் துளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.
லா.ச.ரா. : “நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போக வேண்டும்.
தி.ஜானகிராமன் நளபாகத்தில்
:”ம்.உக்காந்து பேசுங்க. ம் அப்துல் மஜீது. ஆக்ராவில் அழைச்சுண்டு போக அப்துல் மஜீது. இந்தி கிந்தியெல்லாம் நன்னாப் பேசுவேள்னு சொல்லுங்கோ.”
“வாங்க நீங்க. தில்லக்கேணி இந்திதான் பேசுவேன். வாங்க. நானும் வந்து அஞ்சு வருஷமாச்சே. ஊர்க்கதையெல்லாம் தலைகீழ்ப் பாடம். தமிழ் கைடாவே ஆயிட்டேன்.
“போடு சாம்பிராணி…அப்ப கவலையில்லே. கிளம்பு. நல்லூரம்மா கிளம்புங்கோ. நாயுடு பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கா. அதெல்லாம் தில்லி, ஹரித்வார்னு பாத்துப்பம். இப்ப குத்தாலம் கார்ல போகலாம். மஜீத் சார், இவங்க நமக்கு ரொம்ப காலமா குடும்ப சிநேகிதம். நல்லூரு.”
“நல்லூரா ..அதுவும் நம்ம தங்கச்சி ஊரு கிட்டேதான் . நம்ம தங்கச்சியைப் பக்கத்திலேதான் கொடுத்திருக்கு. மதுக்குடியிலே.”
“எல்லாம் பக்கம்தான். இந்த ஊர்லேந்து நம்ம ஊர்களைப் பாரும். எல்லாம் கிட்டக் கிட்டத்தான் தெரியும். தஞ்சாவூர், த்ருஷ்ணாப்பள்ளி ரெண்டும் பக்கத்திலே பக்கத்திலே தெரியும். அக்ரகாரம், பள்ளத் தெரு ரண்டும் ஒட்டிண்டிருக்காப்பிலே இருக்கும். தூரக்கப் போயிடனும். அவ்வளவுதான்”என்று முத்துசாமி திறந்த கார் கதவைப் பிடித்துக் கொண்டு ஏறினார்.
சுந்தர ராமசாமி புளிய மரத்தின் கதையில்…
“ஆனால் புளிக்குளத்தை ஒட்டிய தனது மதியத்தூக்கத்துக்கான இடமான காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்படும் கோரத்தை காண்பதற்கு முன்பே ஆசான் விடைபெற்றுக் கொள்கிறார். தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பூங்கா அமைக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு, செடிகள் நடப்படுகின்றன.
‘மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்’ என்கிறார் வயோதிக நாடார்.
‘அளகுக்கு” என்கிறான் இளைஞன்.
செடிதான் அளகாட்டு இருக்குமோ?’
‘உம்’
செடி மரமாயுடாதோவ்?’

‘அட பயித்தா