மாபெரும் பாடகிக்கு புகழ் அஞ்சலி!!

முகநூலில் : முஜீப் ரஹ்மான்

@நித்தம் நித்தம் நெல்லு சோறு!
@மல்லிகை என் மன்னன் மயங்கும்..
@என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்..
@ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
@என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!@வேறு இடம் தேடி போவாளோ?
@ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்”,@ “பாரதி கண்ணம்மா”, @”பூந்தென்றலே…”, @”நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்”.இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்த பாடகி வாணி ஜெயராம் மறைந்தார்.

பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் வயது முதிர்வினால் காலமானார். 78 வயதாகும் வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சி அலைகள் ஓயும் முன்பே அவரது மறைவு செய்தி திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் தலையில் அடிபட்டு மரணமடைந்திருந்ததாக அவரது வீட்டு பணிப்பெண் கூறியுள்ளார்.

வாணி ஜெயராம் (பிறப்பு: நவம்பர் 30, 1945-இறப்பு பிப்ரவரி 04, 2023) திரைப்படப் பின்னணிப் பாடகி. இவரது இயற்பெயர் கலைவாணி என்பதேயாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.இவர் “ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்படுகிறார்.

வாணிஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் துரைசாமி ஐயங்கார்–பத்மாவதி ஆவர்.தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார். அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

One Comment on “மாபெரும் பாடகிக்கு புகழ் அஞ்சலி!!”

  1. இராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான பாலைவனச்சோலைபடத்தில் சங்கர்கனேஷ் இசையில் வெளியான “மேகமே மேகமே ” பாடல் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று

Comments are closed.