சலனம்/பானுமதி ந

03/02/23 அன்று நான் படித்த என் கவிதை

கண்கள் பிதுங்க கைகள்
எதையோ இறைஞ்ச
தொங்கிய அந்த உடல்-
சடல ஆடையில் மட்டும் காற்று
என்றோ தூவிய பால்கனித் தொட்டியில்
வீர்யத்துடன் முளைத்து நிற்கும் பப்பாளிச் செடி
அது மரமாக அதில் வளர முடியாது தான்
ஆனால், கையகல இலைகளுடன் நின்று
இதுவும் காற்றிற்கு ஆடுகிறது.
சடலம் கொண்ட சலனம்
சலனம் காட்டும் புவனம்
வாழச் சொல்கிறதா,
வாழத்தான் சொல்கிறதா?