அந்தக்குரலுக்கு அழிவில்லை/அனங்கன்

காற்று சற்று அமைதியாய் இருக்கிறது….
அதற்குத்தெரியும் கூற்றுவன்
கொண்டுசென்றது உடலைத்தான்….
ஒரு இனிய குரலை அல்ல.

இசையில் தவழும் இனிய குரலைக்
காலம் என்றென்றும் காற்றில்
சுமந்தபடி அலையும்.

உலகின் அத்தனை திசைகளிலும்
வாழ்ந்துகொண்டிருக்கும்….
வாழப்போகும் அழியாஜீவிதத்தை…
யார்
அழித்துவிடமுடியும்.

ஏழுசுரங்கள் இருக்கும் வரைக்கும்
வாணியின் குரலும் வாழ்ந்தபடி இருக்கும்.