வாணி ஜெயராமன் பற்றி நீ ஏன் கவிதை எழுதவில்லை../அழகியசிங்கர்

சமீபத்தில்
எந்தச் சினிமாப்
பாடல்களையும் லயித்துப்
கேட்பதில்லை..

வாணி ஜெயராமன்
பாடுவதையும்
கேட்டிருப்பேன்

ஆனால்
அந்தக் குரல்
வாணி ஜெயராமனா
சுசிலாவா
ஜானகியா
என்றெல்லாம்
தெரியாது
எல்.ஆர்.ஈஸ்வரியின்
குரலும்
நடிகை பானுமதியின்
குரலையும்
என்னால் அடையாளம்
காண முடியும்

ஆனால்
ஒன்று சொல்வேன்
தனிமையில்
ஒருவர் மரணம்
கொடுமையானது

வாணி ஜெயராமன்
மறைவுக்கு ஆழ்ந்த
இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்