நீர்/கலாவதி பாஸ்கரன்

சிறு துளியாய் பெரு மழையாய்
புவனம் தனில் வீழ்வாய்

மலை உச்சியில் மடுவதனில்
மெளனமாய் உதிப்பாய்

காடு மேடு கடந்து
அருவியாய் ஆர்பரித்து
நிலமதனில் வீழ்வாய்

அங்கும் இங்கும் நடமாடி
நாடு முழுவதும் விரிவாய்
கங்கையாய், யமுனையாய்,
சிந்துவாய் காவேரியாய்,
கோதாவரியாய்,
தாமிர பரணியாய்.

விரிந்து, புல், பூண்டு,
மரம், செடி, கொடி
விலங்கு மற்றும் மண் வாழ்
மானுடம் தம் வாழ்வின்
ஆதார வளங்கள் அளிப்பாய்!

நீரின்றி அமையாது உலகு
இது ஆன்றோர் வாக்கு

மக்கள் உன்னருமை அறியாமல்
மாசு படுத்துவதைக் கண்டு
உள்ளம் நொந்து
கசிந்து உருகுகிறது

மாந்தர் தம் மாசு அகற்றும் மாதாவை
மாசின்றி போற்றும் நாள் எப்போது?

2 Comments on “நீர்/கலாவதி பாஸ்கரன்”

Comments are closed.