இசை/எஸ் வி வேணுகோபாலன்

உறங்கப் போகையில்
ஒலித்த இசை
உறக்கமற்ற இரவுகளில்
உற்ற துணையாக
உரையாடிய இசை
உறவுகளில்
உணர்வுகளில்
உணர்ச்சிகளில்
உயிர்த்திருந்த இசை

தனது உறக்கத்தில்
இடறி விழுந்து
காற்றில் ஐக்கியமானதில்
காயப்பட்டுத்
துடித்து ஓய்ந்தது
அதன் தனிமை !

10 Comments on “இசை/எஸ் வி வேணுகோபாலன்”

  1. இசை குரலுக்கு இனிய அஞ்சலி கவிதை

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  2. இசை வாணி
    காற்றில் கரைந்து
    ஆகாச வாணி ஆனாள்.
    காற்றுள்ள வரை
    அவளின் ஸ்வரங்கள்
    நம்மை மீட்டும்.

  3. நாளைப் பொழுது
    நமக்கென நம்பி
    உறங்கச் சென்ற குயில்
    மறுநாளைக் காணாமல்
    பறந்து பிரிந்து
    விட்டதே….

  4. நாளைய பொழுது
    நமக்கென
    நம்பிக்கை தந்த குரல்
    விடியுமுன் பறந்து
    பிரிந்து விட்டதே…

  5. ஏழு ஸ்வ ரங்களில் எத்தனை ராகத்தையும்,மல்லிகை என் மன்னன் பாடலையும் கேட்டு மயங்காதவரும் உண்டோ? ஶ்ரீமதி வாணி ஜெயராம் அவர் களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  6. கவிதையும் சரி. அதற்கான மறுமொழியின் வெளிப்பாடாக வந்த கவிதைகளும் சரி. சிறப்பு. இசையின் மூச்சில் வாழ்பவர்கள் தான் நாம்.

Comments are closed.