கூட்டம்/ எஸ் வி வேணுகோபாலன்

கூட்டம்
கூடும்
கூடாது என்றாலும்

கூடாத
கூட்டமும்
கூடக் கூடும்

கூடவே கூடாது
என்றவரும்
கூட்டத்தில் வந்தமரும்
கூட்டத்தில்
கூட்டம் நடவாது போகும்

எப்படி இருந்தது
கூட்டம் என்று
கேட்போருக்கு
யார் சொல்வது –
கூட்டத்தில் உள்ளபடியே
கூட்டமே இல்லை என்று!