கண்ணன் என் தம்பி/ஷண்முக சுப்பையா

கண்ணன் என் தம்பி
காலையில் எழுவான்
ஓவென அழுவான்
அப்பா எழுந்து
ஏனெனக் கேட்பார்
அம்மா வந்து
அப்பம் கொடுப்பாள்
அப்பமும் தின்று
கையையும் கடித்து
அழுவான் பின்னும்
கண்ணன் என் தம்பி