
ரஷ்யாவின் கட்டுபாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சம்ர்க்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சி குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள் முன்பு பெரும்கூட்டம் கூடியிருந்தது. அகழ்வாராய்ச்சி குழுவின் தலைவர் மைக்கேல் ஜெராசிமோவ்
உஸ்பெக்ஸ்தானை ஆண்ட மன்னன் தைமூரின் கல்லறையை தோண்டி, உடலை எடுத்து அகவாராய்ச்சி செய்யவே அவர் வந்திருந்தார். தைமூர் என்றால் இரும்பு என பொருள். ஸ்டாலின் என்றாலும் இரும்பு என தான் பொருள்.
தைமூரின் உடலை தோன்டி எடுத்து நிஜத்தில் அவன் எப்படி இருந்தானோ, அப்படி ஒரு சிற்பத்தை உருவாக்கி மியூசியங்களில் வைக்கவேண்டும் என்பதே ஸ்டாலினின் கட்டளை. தைமூரின் உடல் தோண்டி எடுக்கபட்டு ரஷ்யா கொண்டு செல்லபட இருந்தது. உள்ளூர் மக்கள் அவர்களை எதிர்க்கவில்லை. ஆனால் பயமுறுத்தினார்கள்.
“தைமூர் இறக்கையில் என் கல்லறையை தோண்டி எடுப்பவன் அழிவான். அவன் நாடும் அழியும் என சாபம் கொடுத்துவிட்டுதான் இறந்தான். 1740ல் நாங்கள் சொல்ல, சொல்ல கேட்காமல் பாரசிக மன்னர் நாதிர்ஷா கல்லறை பெட்டியை தோண்டி எடுத்து அதனுள் இருந்த விலையுயர்ந்த வைரத்தை பாரசிகம் கொன்டுபோனார். அடுத்த ஆண்டே அவரது மகன் அவரை கொல்ல முயன்றான். இவர் அவனது கண்களை குருடாக்கிவிட்டார். மனவேதனையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் கொல்லபட, அவரது சாம்ராஜ்ஜியம் அதன்பின் அழிந்துவிட்டது…நீங்கள் அதை தொட்டால் உங்களுக்கும் அதே நிலைதான்..”
“மாபெரும் சோவியத் ரஷ்ய அரசை தைமூரின் சாபம் வீழ்த்திவிடும் என்கிறீர்கள். ரைட்டு” சிரித்தபடி கல்லறையை தோண்டி கல்லறைபெட்டியை திறந்தார் மைக்கேல் ஜொராசிமோவ். கல்லறைபெட்டியில் அந்த சாபம் செதுக்கபட்டு இருந்தது
“என் கல்லறையை எவன் திறந்து என்னை தொல்லை செய்தாலும், என்னை விட பலமடங்கு கொடூரமான ஒருவனால் அவனது நாடு முற்றிலும் அழிக்கபடும்”
சாபத்தை கண்டு சிரித்தபடி உடலை விமானத்தில் ரஷ்யாவுக்கு கொன்டு சென்றார் மைக்கேல். விமானம் மாஸ்கோவை தொட்ட அதே நாளில் ஹிட்லர் ரஷ்யா மேல் படை எடுத்தான். சுமார் 5 கோடி ரஷ்யர்களை கொன்றபோர் அது. நாடு அழியும் செய்தி வர, வர தைமூரின் உடல் மைக்கேலை கண்டு சிரித்தபடி இருப்பது போல அவருக்கு பிரமை. நேராக ஸ்டாலினிடம் போனார். சாபத்தின் விவரத்தை சொன்னார்
“உடலை முழுமரியாதையுடன் விமானத்தில் கொண்டுபோய் அதே இடத்தில் அடக்கம் செய்துவிடுங்கள்” என்றார் ஸ்டாலின்
அத்தனை கடுமையான போரிலும் அந்த உடல் உஸ்பெக்கிஸ்தான் எடுத்து செல்லபட்டு அதே இடத்தில் மீண்டும் அடக்கம் செய்யபட்டது. உள்ளூர் வாசிகள் “சொன்னோம், கேட்டீர்களா” என்றார்கள்.
உடல் அடக்கம் செய்யபட்டவுடன் அந்த செய்தி வந்தது.,”ஸ்டாலின்கிராடு போரில் ரஷ்யாவுக்கு மகத்தான வெற்றி. ஜெர்மானிய படைகள் பின்வாங்குகின்றன..”

