தெய்வ வாக்கு! /ஆர்க்கே

அவள் சொல்வாள் அடிக்கடி:
“உன் மகத்துவம் தெரியாதோரிடம்
சமத்துவம் செய்யாதே!”

அவள் சொல்வாள் அடிக்கடி:
“உன் மகத்துவம் தெரியாதோரிடம்
சமத்துவம் செய்யாதே!”

“உன்னை மதியாதார் உனை
அழைத்தாலும் உள் நுழையாதே!”

” மனம் உணராத மனிதரிடம்
உன் மனம் வெற்று பொம்மைபோல!”

“பிறரைப்பற்றி உன்னிடம் பேசுவோர்
யாரும் பிறரிடம்
உன்னைப் பற்றி நிச்சயம் பேசுவர். “

“ஊர்க்கதை பேசுவோர் பலரும்
உன்னுடன் நேரம்போக்கவே பேசுவர்!”

“தேவைகள் நோக்கில் பழகுவோர்
உலகில் நீயொரு பயன்பாட்டு உபகரணமே!”

“உள்ளன்பு காட்டும் தூய உள்ளம்
ஒருபோதும் உன்னை விட்டுவிடாது!”

“நீ நல்லவனென புரியவைப்பதைவிட
தீயவனல்லன் என உணர வைப்பதே
சாலச் சிறந்தது”

“இருப்பதற்குள் ஆகச் சிறந்த
நம்பிக்கை இறைநம்பிக்கை!”

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

தந்தையைப்போல் ஒரு தெய்வமில்லை.

என்
அன்னை சொல் மிக்க மந்திரமில்லை!
———-அன்புடன் ஆர்க்கே!