ஆடைக்கும் பரிசளித்து விடுவேன்/செ.புனிதஜோதி

தேனீர் குடிக்கும்
பொழுதெல்லாம்
இரண்டொரு சொட்டு
ஆடைக்கும் பரிசளித்து விடுவேன்

ஏழுகழுத வயசாச்சு
டீ குடிக்கத்தெரியாதான்னு
அம்மா திட்டுவாள்
சலவை செய்யும் வேளையில்

இப்பொழுதும்
அதே தவறைத் தொடர்கிறேன்
திட்டும் அம்மாவையும், சொற்களையும்
நினைவுக்குள் நட்டுவைத்துக்கொள்ள.