பூ.சுப்ரமணியன்

வாழ்க்கை

ஆசை தொடங்கும்
இடத்தில் பேராசை
தொடங்குகிறது!

பேராசை தொடங்கும்
இடத்தில் துன்பம்
தொடங்குகிறது!

பேராசை முடியும்
இடத்தில் இன்பம்
தொடங்குகிறது !

இன்பம் தொடங்கும்
இடத்தில் வாழ்க்கை
தொடங்குகிறது!

வாழ்க்கை தொடங்கும்
இடத்தில் அன்பு
பரவத் தொடங்குகிறது!

அன்பு பரவும்
இடத்தில் வாழ்க்கையில்
அமைதி  கிடைக்கிறது!


2 Comments on “”

Comments are closed.