மூன்று கவிதைகள்

உமா பாலு

வாழ்க்கை

1.
மண் தொட்ட நாள் முதல்
மண் புகும் நாள் வரை
எப்போதும்ஏதேனும்கற்றலும்
கற்பித்தலுமாய் ஜீவனோடு
நகர்கிறது வாழ்க்கை

2.

விழிப்பும் உறக்கமும் இருப்பையும்
இல்லாமையயையும் நித்தம்
நினைவுறுத்தும் எனினும் சித்தம்
என்னவோ நித்தியம் என்று
இறுமாந்திருக்கும்.

3.

கவிதை என்ன கொடியிலா காய்க்கிறது?
பறித்து வந்து பந்தியில் இட,
கருத்து வேணும் பொருத்தமா அதுக்கு
சந்தமும் வேணும்,எனக்கோ மந்த மூளை
வெந்த சோற்று பந்திக்காரி!

One Comment on “மூன்று கவிதைகள்”

Comments are closed.