
ப.மதியழகன்
வெளிச்சம் பிரகாசத்தைக்
குறிப்பதானால்
இருட்டு எது?
பகல் வேளையில்
இருட்டு எங்கு
பதுங்கி இருக்கிறது
ஒளிந்து கொள்ள
இடமில்லாத போது
தன்வுருவை எங்கு
மறைத்துக் கொள்கிறது
வெளிச்சம் இருப்பதை
இல்லாமலாக்கிவிடுகிறது
இருட்டுக்கு திசை இல்லை
தோன்றுதலும் இல்லை
மறைதலும் இல்லை
வெளிச்சம் வாழ்க்கை
இருள் மரணம்
வெளிச்சம் வாழ்க்கையோடு
சமரசம் செய்து கொள்கிறது
கருவறை கல்லறை
என இரு விளிம்புகளுக்கு
இடையே
வாழ்க்கை மின்மினியைப் போல்
நகர்கிறது
மரணித்துவிடுவோம் என்று
தெரிந்தும்
போதையின் பாதையில்
வெளிச்சத்தை
பருகிக்கொண்டிருக்கின்றன
விட்டில் பூச்சிகள்!

சிறப்பு