தமிழில் : க. மோகனரங்கன்

என் முகத்தை
இரண்டு கைகளாலும்
தாங்கிக்கொண்டேன்.
இல்லை, நான் அழவில்லை.
என் முகத்தை
இரண்டு கைகளாலும்
ஏந்திக்கொண்டேன்
எனது தனிமையை
வெம்மையாக வைத்திருக்க –
இரண்டு கைகள் பாதுகாக்கும், இரண்டு கைகள் ஊட்டமளிக்கும்,
என் ஆன்மா கோபத்தில்
என்னை விட்டு விலகும்போது
இரண்டு கைகள் தடுக்கும்.
