
பயமில்லாத ஒரு முத்தம்
கூச்சம் இல்லாத ஒரு முத்தம்
சந்தேகம் இல்லாத ஒரு முத்தம்
வேறு பயன் கருதா ஒரு முத்தம்
வன்முறையில்லா ஒரு முத்தம்
நிர்பந்திக்கப்படாத ஒரு முத்தம்
அன்றாடக் கடமைகளில்
ஒன்றாக இராத ஒரு முத்தம்
சூழ்ச்சிகள் இல்லாத முத்தம்
நிபந்தனையில்லாத முத்தம்
துர்வாடைகள் இல்லாத முத்தம்
பிச்சையாகப் பெறாத முத்தம்
முழுமையாக ஒப்புக்கொடுக்கும் முத்தம்
அப்படி ஒரு முத்தம்
எப்போதாவது நிகழத்தான் செய்கிறது
அப்போது ஒரே முழுமையான் நீலவானத்தை
நம் கண்களால் காணலாம்
மேலும் அதுவரை நாம் தீண்டியிராத
ஒரு மிருதுவான அற்புதத்தை
13.2.2023
காலை 10.42
