
சடுதியில் ஒரு சொல்
வார்த்தையாகி விடுகிறது.
சடுதியில் ஒரு வார்த்தை
கவிதையாகிவிடுகிறது.
சடுதியில் ஒரு கவிதை
வாழ்க்கையாகி விடுகிறது.
சடுதியில் ஒரு வாழ்க்கை
வரமாகி விடுகிறது.
சடுதியில் ஒரு வரம்
யுகங்கடந்து விடுகிறது
சடுதியில் ஒரு யுகமே
நீயாகி விடுகிறது!
என் வரையில்
அந்தச்
சொல், வார்த்தை,கவிதை,
வாழ்க்கை,வரம், யுகம்
எல்லாமே நீதானே–
அம்மா! அம்மா! அம்மா!
