ஆர்கானிக் பொருட்க்ள் எவையானலும் சரி/நியாண்டர் செல்வன்

உதாரணத்துக்கு விறகு என வைத்துக்கொள்வோம்.
அதை ஒரு பாத்திரத்தில் போடவும். துளிகூட ஆக்ஸிஜன் புக வழியில்லாமல் மூடவும். அதன்பின் அதை நன்றாக சூடாக்கவும். இப்ப என்ன ஆகும்?
உள்ளே மரம். காற்று புக வழியில்லை. சூடாக்கபட்டுக்கொன்டிருக்கிறது. விரைவில் அதில் இருந்து மீதேன், ஹைட்ரஜன், கார்பன் மோனக்சைடு எரிவாயுக்கள் வெளியெ வரும். அதன்பின் மீதமிருக்கும் மரம் அப்படியே நிலக்கரிமாதிரி ஆகிவிடும். பூமிக்கு அடியே 3 லட்சம் ஆண்டுகள் பிடிக்கும் புராசஸ் இப்படி எளிமையாக சில நிமிடங்களில் நடந்து நிலக்கரியும், எரிவாயுவும் தயார்
சரி…இதுக்கு என்ன இப்ப?
இதை கண்டுபிடித்தவர் ஒரு ஜெர்மன் விஞ்ஞானி. இரண்டாம் உலகபோரில் இந்த முறை மூலம் உருவான எரிவாயு மூலம் தான் ஜெர்மன் டாங்கிகளும், ஜீப்களும் ஓடின. பெட்ரோல் இல்லாமல் ஐந்து லட்சம் ஜெர்மானிய கார்கள் “மர வாயு” எனப்படும் இந்த வாயுவை பயன்படுத்தி ஓடின.
கென்யா, உகாண்டா, செனெகல், ஐரோப்பா நாடுகள் பலவற்றிலும், இதன் தாயகமான ஜெர்மனியிலும் மீண்டும் மரவாயுவை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் மரத்தை பயன்படுத்தி அல்ல, மனித கழிவை பயன்படுத்தி. எந்த ஆர்கானிக் பொருட்கள் மூலமும் இதை செய்யமுடியும். மனித கழிவை இதேபோல சூடாக்கினால் நிலக்கரியும், எரிவாயுவும் தயார்.
எரிவாயுவும், நிலக்கரியும் மீண்டும் அதே நிலையங்களில் மனித கழிவை சுத்திகரிக்கும் நிலையங்களின் எரிபொருள் செலவை குறைக்க உதவும். மனித கழிவுகளும் பிரச்சனையே இல்லாமல் ரீசைக்கிள் செய்யபடும்.
சூரியவெப்பத்தை பயன்படுத்தி எரிக்கும் திட்டமும் உள்ளது. அப்படி நடந்தால் அதன்பின் எடுக்கபடும் நிலக்கரியை வைத்து வீடுகட்டும் செங்கற்கள் தயாரிக்கலாம் என்கிறார்கள்.
2040ம் ஆண்டு
பில்டர்..”சார், மார்க்கட்ல ஜெர்மன் செங்கல்னு ஒரு புது செங்கல் வந்திருக்கு. வீடு கட்டிடலாமா?”
கஸ்டமர்..” சூப்பர் சார். ஜெர்மன் செங்கல்னா தரத்துக்கு கேட்கணுமா? தாராளமா கட்டிடலாம்”

பூமியும்_வானமும்

~