
சோழனோடு புலவருக்கு வந்த
நட்பு
பிடித்தது இடம் இலக்கியத்தில்.
ஔவை அதியனின் நட்பு
மலையுச்சி
ஏறி எடுத்தது நெல்லிக்கனி.
இங்கோர் விந்தை நட்பு.
வெயில்
வாட்ட வாயில் திறந்து
வந்து
அழைப்பு மணியை
அழுத்தும்
வேளை இவர் பெயர்
அடிபட்டது.
,’உனக்குத் தெரியுமா
அந்த
மணவிழாவில் நான்
உரையில்
வைத்துத் தந்தது
ஐந்தாயிரம் ரூபாய் .
பணத்திற்காகவே பார்த்துப்
பார்த்து
அழைக்கிறான்.எல்லாம்
தண்ட ச் செலவு.
மனைவியிடம் நண்பர்
சொன்னது
வெளியில் கேட்டது.
உயர்ந்த நட்பு என்று
போட்டிருந்த
ஆகாயப் பந்தல் காணாது
மகனின்
மணவிழா அழைப்பைத்
தராமலே
வெளியேறினார் அந்த
நண்பர்.
