இனிக்கும் தமிழ் -173/டி வி ராதாகிருஷ்ணன்

இராமன் சீதை அருகில் இல்லாததை எண்ணி வருந்துகிறான்.

அதேபோல இராமன் அருகில் இல்லாததால் வருந்துகிறாளாம்.ஆனால் இன்பத்திற்காக இல்லை..பின்..?

கம்பனின் பாடலைப் பாருங்கள்

பாடல்


‘அருந்தும் மெல் அடகு ஆர் இட
அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
எழவும் ஆண்டு எழாதாள்.

பொருள்

‘அருந்தும் – உண்ணும்
மெல் அடகு- இலை கறி உணவு
ஆர் இட -யார் பரிமாற
அருந்தும்? ‘ -சாப்பிடுவான் ?
என்று அழுங்கும்; -என்று வருந்துவாள்
‘விருந்து கண்டபோது என் உறுமோ? -விருந்து வந்தால் என்ன செய்வானோ
என்று விம்மும்; – என்று நினைத்து விம்முவாள்
‘மருந்தும் உண்டுகொல் – மருந்து கூட இருக்கிறதா
யான்கொண்ட நோய்க்கு?- என் துன்பத்திற்கு
‘என்று மயங்கும்; – என்று மயங்குவாள்
இருந்த – அவள் அமர்ந்து இருந்த
மா நிலம் -நிலம்
செல் அரித்து எழவும் = கரையான் புற்று எழுப்பி அரித்த போதும்
ஆண்டு எழாதாள். – இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்து இருந்தாள்
இதில் நாம் பார்க்க வேண்டியது
ஒன்று சீதையின் துயரம். அது தெளிவாகத் தெரிகிறது. கணவன் எப்படி
சாப்பிடுவன், எப்படி விருந்தை உபசரிப்பான் என்று வருந்தியது தெளிவாகத்
தெரிகிறது.
இரண்டாவது, பாடலின் உள்ளே கம்பன் காட்டும் இல்லறம். இல்லத்தின் அறம்.

                           -