அம்மா /வண்ணதாசன்

ஒரு அறையில் இரு என்றால்
அம்மா இருக்கமாட்டாள்.
முன்னறை,
பின்னறை
அடுப்பறை,
படிப்பறை
குளிப்பறை,
கழிப்பறை என்று
மாறி மாறிக் கொண்டிருப்பாள்.
படுத்த படுக்கை ஆனபின்
ஒரே இடத்தில் இருக்கிறாள்.
ஒவ்வொரு அறையும் அவளிடம்
வந்து வந்து போகிறது.

Miss you & Love you “Pavunu” ❤️ 😔

One Comment on “அம்மா /வண்ணதாசன்”

Comments are closed.