
இன்று விருட்சம் கவியரங்கில் நான் வாசித்த கவிதை
நுண்அணுக்களின் அதிர்வுகள்
பரமாணுபவ பரமாணுபவ
பால்வீதி முழுவதும்
சுத்த வெளி
நட்சத்திரங்களின் ஒளி
பலஆயிரம் மைல்கள் பயணித்து
பூமியை வந்தடைகிறது
சூரியன் நெருப்புக் கோளம்
வெப்பத்தை உழிழ்கிறது
ஜடம் அழிந்துபோகும்
ஆனால் வெளி
உண்மையில் நிலவு
தேய்கிறதா வளர்கிறதா
கிரகணம் வானியல் அற்புதம்
அந்தி வானத்தில் தான்
வெளிச்சமும், இருளும்
சந்தித்துக் கொள்கிறது
விதியின் ரேகைகளை
யாரால் நகலெடுக்க முடியும்
ஜாதகக் கட்டம்
நடந்ததைச் சொல்லும்
நடக்கப்போவதை
இறைத் தூதர்களின் வருகையை
வால் நட்சத்திரம்
முன்னறிவிப்புச் செய்கிறது
கருந்துளை பூமியை விழுங்கிவிடும்
இருப்பது சுத்த வெளி
அதுவே சிவம்
இல்லை இல்லை
அதுதான் சிவம்!
