‘நேர்க்கோடன்று வரலாறு’/எஸ்ஸார்சி

97 கவிதை நேசிப்பு மெய்நிகர்க் கூட்டத்தில்
வாசித்த கவிதை

சிகாகோவில் உத்யோகம்
துறையோ தகவல் தொழில்நுட்பம்
பையன் இந்தியா
வந்திருந்தான்
வாரங்கள் நான்கு விடுப் பென்றான்
இரவுப் பகலாய் லாப்டாப் தான்
பணி பணி விடுப்பிலும் பணி.
வார ஓய்வா? மண்ணாங்கட்டி
இல்லில் இருந்தே பணி செய்தான்
பணி பணி பணி மட்டுமே
வெள்ளைக்காரப்
பணியாளனுக்கு
வேலை எட்டு மணி நேரந்தான்
வாரம் ஒருநாள்
விடுப்பு நிச்சயம்
ஊதியமோ இருமடங்கு
பையன் சொன்னான் கேட்டுக்கொண்டேன்.
ஆயிரம் முறை நான்
கோஷம் போட்டேன்
தொண்டை வரண்டு ரணம் சுமந்தேன்
உழைப்பு ஓய்வு உறக்கம்
மூவெட்டு
ஒரு நாட்கணக்கு.
ஹேமார்க்கெட்டில் தொழிலாளி
போராடினான் குண்டடி பட்டான்
செத்து மடிந்தான்
குருதியில் நனைத்துச்
செங்கொடி தந்தான்
முடிந்து போயின
ஆண்டுகள் நூறு
புரண்டு புரண்டே
சயனிக்கிறார்கள்
கல்லறை துயிலும்
மேதினத்தியாகிகள்.

2 Comments on “‘நேர்க்கோடன்று வரலாறு’/எஸ்ஸார்சி”

Comments are closed.