
மெலிந்த உருவம் பெரும்பாலும்
வெளிர் நிற உடைகள்
அரைக்கை சட்டைபயில்
பவுண்டன் பேனா –
அதன் வயது நாற்பது என்பார்
நோக்கியாவின் ஆரம்ப கால
செல்லிடைபேசி
ஊபர் வேண்டாம் பொது
போக்குவரத்தில்
செல்லலாம் என்பார்
மூன்று இட்டிலி சாப்பிட்டவுடன்
நான்காவது தேவையா
என்று கேட்பார்
காபியில் சார்கரை சேர்க்க மாட்டார்
பட்டன் வைத்த மணிபர்சில்
அதிகம் பணம் இருக்காது
கட்டாயம் சில்லறைகள் இருக்கும்
ஆதார் அட்டையுடன்
கோபம் கொண்டால் புருவம்
சுருக்கி நகர்ந்து விடுவார்
வாக்குவாதம் வந்தால்
பாதியில் நிறுத்தி விடுவார்
தடித்த மூக்குகண்ணாடி வழியே
என்னைப் பார்க்கும்போது
அது
பாசமா நேசமா நக்கலா குத்தலா..
எதுவுமே புரிவதில்லை
