
ஆர் வத்ஸலா
- நான் பெற்றது
சிறுவயதில்
தந்தை என்றால்
பயம்
எனக்கு
இப்பொழுது
நான்
என்றால்
என் மனைவிக்கு
2. நிறைவு
இட்லியின் ஸ்பரிசத்தில்
தும்பைப் பூவை
பால் குக்கரின் அழைப்பில் குழவியின் கூப்பாட்டை
குக்கரின் விசிலில்
குயிலின் கீதத்தை
தோசையின் வட்டத்தில் பௌர்ணமி நிலவை
கண்டும்
கேட்டும்
களிக்கும்
எனக்கு
சமையல் ஒரு சுகமே
