
பேயோன்
நெகிழ்திறன்
சதா வந்துகொண்டும்
போய்க்கொண்டும் இருக்கின்ற
தினசரி மனிதர்களை
மென்மையாகப் பார்க்கிறேன்
சிங்க்கின் குழாயடியில் நிற்கும்
தேய்க்காத பாத்திரம் போல்
நிறைந்துவிடுகிறது மனசு.
கண்களும்கூட.
அக்கா
எங்கு பார்த்தாலும்
இருக்கிறாள் அக்கா
எங்குமில்லாதபோதும்
குருவியாகவாவது
இருக்கிறாள் அக்கா.
உருக்கம்
கண்கள் இடுங்கிப்
பல் தெரியப் புன்னகைத்துக்
கைகூப்பியபடி எழுதினேன்
இந்தக் கவிதையை
நன்றாக இருக்கிறதா?
(தமிழில் முகியமான கவிஞராகிய பேயோன் விருட்சம் தினசரிக்கு எழுத்துவதாகக் கூறி உள்ளார்)

சபாஷ்.. 👌👍
அருமை