
இது வரையிலும் கோயில்களில் சிறிய அளவில் பூஜை, பாராயாணங்கள் என்று இருந்த சிவராத்திரி விழாவை உலக அளவில் பிரமாண்ட ஆன்மீக திருவிழாவாக மாற்றிய பெருமை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களையே சாரும்.
கோவை என்றாலே குண்டு வெடிப்பும் , கல்வி சேவை செய்கிறேன் என்ற பெயரில் மலையை ஆக்கிரமித்து மத சேவையுமே அடையாளம் என்றாகி விட்ட நிலையில் அகில உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் ஈஷாவையும் ஆதியோகியையும் மிகப்பெரும் அடையாளமாக்கியவர் .
ஆனால் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்து ஆங்காங்கே சில சலசலப்புகள் எழுவதை பார்க்கமுடிகிறது.
என்னை பொறுத்த வரை ஈஷாவின் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் குறை காண்பது அர்த்தம் அற்றது. மாற்று மதத்தினர் ஆயிரம் சொல்வார்கள், ஏனென்றால் பிழைப்பு போகிறதே என்ற அழுகை அது. ஆனால் இந்துக்களாகிய நாமும் சேர்ந்து கொண்டு வசை பாடுவது தவறு.
சிவராத்திரி விழாவில் ஆடலாமா, பாடலாமா என்றால் நிச்சயம் ஆடலாம் பாடலாம்.
ஆதி காலம் தொட்டே தமிழ் கலாச்சாரம், ஹிந்து மதம், நடனத்திற்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால், வேறு எந்த கலாச்சாரமும், மதமும் நடனம் ஆடும் ஒருவரை கடவுளாக ஏற்று கொண்டது இல்லை.
ஹிந்துக்களாகிய நாம் தான் அவரை ‘நடராஜர்’ அதாவது ‘நடனங்களுக்கு அரசர்’ என அழைக்கிறோம். மேலும், அவருக்கென்று சிதம்பரத்தில் கோவிலும் கட்டியுள்ளோம்.
கிராமத்து சிறு கோயில்களின் கொடைவிழா முதல் ஆகம விதிகளின் படி திருவிழாகள் நடத்தப்படும் மிகப்பெரிய கோயில் திருவிழாக்கள் வரை வாத்தியங்களின் இசையும் பஜனைகளும் ஆடல் பாடல்களும் தானே அடி நாதம்.
ஊஞ்சல் சேவை என்கிறார்கள், அதுவும் ஒரு வகையான ஆனந்த நடனம் தானே. பூ பல்லக்கு, அதுவும் அப்படியானதுதானே. சிறு தெய்வங்களுக்கு தாரை தப்பட்டை என்றால் பெரிய கோயில்களில் நாதஸ்வரமும் மிருதங்கமும்…. அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ப இவை மாறுபட்டாலும் அடிப்படை என்னவோ ஆடலும் பாடலும் தான்.
அதுமட்டுமின்றி, கூத்தன், ஞான கூத்தன், சபேசன் அம்பலத்தான், தில்லையம்பலத்தான், அம்பலத்தரசன், பொன்னம்பலம் என நடனத்துடன் தொடர்புடைய பல பெயர்களை கொண்டுதானே சிவபெருமானை அழைக்கிறோம்.
இன்னும் சொல்லபோனால் இந்த பிரபஞ்சமே ஒரு வித நடனத்தில் தான் இயங்குகிறது. அறிவியலாளர்களே பிரபஞ்சதின் சரியான முறையான இயக்கத்தை காஸ்மிக் டான்ஸ் என்று பெயரிட்டுத்தான் அழைக்கின்றனர்.
மஹாசிவராத்திரியின் தலைவனான நடராஜரை கொண்டாடும் விழாவில் நடனம் ஆடுவது தவறு என்று எப்படி சொல்ல முடியும்.
நடனம் ஒரு அற்புதமான யோகம். கண்களை மூடி எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தியானித்து யோக நிலையை அடைவது எல்லோராலும் சாத்தியமற்றது.
ஆனால் மெய் மறந்த ஒரு நடனத்தின் மூலம் இந்த உலகத்தையே மறக்க முடியும். முறையாக ஆட வேண்டும் என்ற கட்டாயம் அல்ல.
எப்படி ஆடினாலும் நடனம் ஆடுபவருக்கு அற்புத உணர்வுகளை வழங்க வல்லது. நடனம் உடல் மீதான அனைத்து அடையாளங்களையும் மறக்க செய்யும்.
ஆண், பெண், ஜாதி, மதம், பதவி, அதிகாரம் என்ற எந்த ஒரு எண்ணமும் நடனம் ஆடுபவரின் மனதில் இருக்காது. நடனம் மட்டுமே முழு மனதையும் ஆக்கிரமித்து நிற்கும். தன்னை மறக்க செய்யும் இதுவும் ஒரு யோகம் தான் .
ஒரு பார்வையாளராக இருந்து நடனத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அதை அனுபவித்து மட்டுமே உணர முடியும்.
இப்படி, யோக அறிவியலின் படியே , ஈஷா மஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.
அங்கு ஆடுப்பவர்கள் யாரும் மது போதையில் ஆடவில்லை. அரைகுறை ஆடைகளுடனோ, இல்லை அசிங்கமான அங்க அசைவுகளுடனோ ஆடவில்லை. முறையாக விரதம் இருந்தே செய்கின்றனர்.
இதை அசிங்கம் என்றோ, ஆபாசம் என்றோ கூறுபவர்கள் நடராஜரின் நடனத்தையும் ஆதியோகியாக அமர்ந்து அவர் தோற்றுவித்த யோக அறிவியலையும் புரிந்து கொள்ளாமல் அறியாமையில் ஆர்ப்பரிக்கின்றனர்.
பிற மதத்தவர்கள் எவரும் தங்கள் மதத்தின் குறைகளை பொது வெளியில் விமர்சிப்பதில்லை. கிண்டல் கேலி செய்வதில்லை. ஆனால் நாம் மட்டும் ஏன்?
எனவே ஆதரிக்கவில்லை என்றாலும் தயவு செய்து அசிங்கபடுத்தாதீர்கள்…
தகவல் ஒரு தொடர் பகிர்வு. 🙏
#அன்புடன்❤️ #திருப்பூர்
