
துள்ளும் மீனுக்கும்
தூண்டில் முள்ளுக்கும்
இடையில்
எப்போதுமிருப்பது
கைசொடுக்கும் நேரம்தான்!
அதற்குள்
ஓடி முடிகிறது ஒரு நதி;மோக
தேங்கி நிறைகிறது ஒரு ஏரி:
அலையின்றி அமைகிறது ஒரு குளம்;
புரண்டு மறிகிறது ஒரு கடல்;
தோன்றி மறைகிறது ஒரு கனவு;
வாழ்வென மயங்குகிறது நினைவு.
