கடமை, கண்ணியம், தட்டுப்பாடு/வாசுதேவன்ஸ்ரீனிவாசன்

மார்ச் 31

பேங்கிலிருந்து எடுத்து வந்த சம்பளத் தொகையை ராகவன் சரி பார்த்துக் கொண்டிருந்தபோது செல்போன் மணி அடித்தது .

ராகவன் ஒரு பிரபல தனியார் உடமை கட்டிட நிறுவனத்தின்
கேஷியர் .. … பிளாக் மார்க் ஏதும் இல்லாத நீண்ட சர்வீஸ்.

“ஹலோ ராகவன் ஹியர் ..”

“சார் ..நான் ஓ பி சி பேங்க் கேஷியர் பேசறேன் …”

“சொல்லுங்க …”

“கொஞ்சம் முன்னே அஞ்சு லட்ச ரூபா கேஷ் ட்ரா பண்ணிட்டு போனீங்க இல்ல …?”

“ஆமாம் சார் ..”

“நான் கூப்பிடக் கூப்பிட கேஷ் பண்டில எடுத்துட்டு அப்படி ஓடினீங்க …?ஏதும் எமெர்ஜென்சியா ?”

“ஒண்ணுமில்ல சார்… மணி அப்போவே ரெண்டு ஆயிடுச்சு …இன்னைக்கு மார்ச் 31… சாயந்தரத்துக்குள்ள ஒர்க்கர்ஸுக்கு சம்பளம் குடுத்து முடிக்கணும் ….கேஷ் ஆடிட்டிங் வேற இருக்கு ..

என்னதான் நெப்ட், பே டி எம்,
கூகிள் பே , சிசி டி வின் னு டெக்னாலஜி வளர்ந்தாலும் ஒர்க்கர்ஸுக்கு சம்பளத்த இன்னைக்கும் கேஷாத்தான் குடுத்துகிட்டு இருக்கோம்…அமௌன்ட் சரியாதான் இருக்கும்கிற நம்பிக்கையில கவுண்டர் லே இருந்து அப்படியே பண்டில்களை அள்ளிக்கிட்டு வந்தேன்…ஏதும் பிரச்னையா ?சரியா இருக்குமில்ல?”

“இல்லே …எதுக்கும் ஒரு தடவ செக் பண்ணிக்கோங்க …”

“என்ன சார் இழுக்கிறீங்க? ஷாட் வருமா ?”

“ஷாட் வராது.. எக்செஸ்சா இருக்கும்”

“எக்ஸ்ஸஸ்ஸா? எப்படி சார் ?காமெடி பண்ணாதீங்க …”
.
“நெஜமாத்தான் சொல்றேன்.. இன்னைக்கு நீங்க கொண்டு போன உங்க கேஷ் பண்டிலோட கவுண்டர்ல
நான் வச்சிருந்த ஒரு இருநூறு ரூபா செக்ஷனயும் சேத்து அள்ளிக்கிட்டு போனா ஷாட்டா வரும்? எக்செஸ்தான் வரும்! அதனால அந்த எக்செஸ் செக்ஷனை எடுத்து தனியா வைங்க …”

“தனியா வச்சு ?”

“அது இன்னொரு கஸ்டமருக்கு போக வேண்டிய பணம்…. நீங்க தூக்கிட்டு போயிட்டிங்க ..”

“ஓ….!சாரி .. நீங்க சொல்றாப்போல எக்ஸஸ் இருந்தா நிச்சயம் எடுத்து வைக்கிறேன்…நீங்கதான் வந்து வாங்கிக்கணும் …கொண்டு வந்து கொடுக்க எனக்கு டைம் இல்ல “

“உங்கள யார் கொண்டுவந்து குடுக்க சொன்னாங்க? பொழைக்க தெரியாத மனுஷனா இருக்கீரே …?”

கிண்டலாய் கேட்டார் பேங்க் கேஷியர்.

“என்ன சொல்றீங்க ? புரியல “

“புரியல ? காதோடு காது வச்சா மாதிரி அந்த எக்ஸஸ் அமௌன்ட்ட நாம பிப்டி… பிப்டி …எடுத்துக்கலாம் …டீல் ஓகே?

“விளையாடாதீங்க சார்…அதெல்லாம் தப்பு …

“சொல்றத அப்படியே கேளுங்க …இல்லேன்னா நாம ரெண்டு பேருமே மாட்டிப்போம் …”

“எப்படி ?”

“கேஷ் ஆடிட்டிங் போது எக்செஸ் கேஷ் வச்சுக்கிட்டுருந்ததுக்காக நீங்களும்…..பணத்தை மிஸ் பண்ணின கஸ்டமர் கம்பளைண்ட் குடுத்தா சந்தேகக் கேசுல நானும் மாட்டிப்போம்…”

ராகவன் என்னவோ இவருக்கு கீழே வேலை செய்பவர் போல் அதிகாரமாய் பயமுறுத்தினார் பேங்க் கேஷியர்

“அதெப்படி சார்? லாஜிக் இடிக்குதே .. இன்னொருத்தர் பணத்தை நாம பங்கு போட்டுக்கிட்டா மட்டும் மாட்ட மாட்டோமா ?
அப்போ மட்டும் மிஸ் பண்ணவர் கம்ப்ளெயிண்ட்
குடுக்க மாட்டாரா?”

“மாட்டிக்க மாட்டோம் …! ஏன்னா நீங்க சொல்லாத வரைக்கும் பணம் உரியவர் கைக்கு போகலேங்கறது நமக்கு மட்டும்தான் தெரியும் …அப்படியே கம்பளைண்ட் வந்து என்னை விசாரிச்சா லும் ஈசியா பழியை கஸ்டமர் மேலேயே திருப்பிடுவேன் ..எந்த கோர்ட்டுக்கு போனாலும் அவர் பக்கம் கேஸ் நிக்காது …பேங்க் ரூல்ஸ் படி கேஷ வாங்கிட்டு கவுண்டரிலிருந்து நகந்துட்டாலே க்ளைம் பண்ற ரைட்ஸ் எந்த கஸ்டமருக்கும்
கெடையாது …”

சட்ட ரீதியாய் எந்த பிரச்னையும் இல்லை என்பதை தெளிவாய் தெரிந்து கொண்டு தன் திட்டத்தை நியாயப் படுத்தினார் பேங்க் கேஷியர்.

“சார் …இன்னொருத்தர் பணம் நமக்கு எதுக்கு ? அதை நாம எடுத்து அனுபவிக்கறது தப்பு இல்லையா? உங்களுக்கோ ஆள் யாருன்னு தெரியும்…. …போன் பண்ணி வரவழைச்சு அவர் கிட்டேயே
குடுத்துடலாமே ….?”

ராகவன் பேச்சில் கண்ணியமான அணுகு முறையும் கடமை உணர்வும் நிறைந்து இருந்தது

ஆனால் பேங்க் கேஷியர் விடவில்லை …மேலும் ராகவனை மூளைச் சலவை செய்வதில் மும்முரமாய் இருந்தார் .

“நல்லதுக்கே காலம் இல்ல…! …நான் உங்களுக்கு சுலபமான வழியில லம்ப்பா ஒரு அமௌன்ட் கெடைக்க வழி சொல்றேன் …நீங்க…..? வர்ர ஸ்ரீ தேவியை வேண்டாம்னு உதறிட்டு வெட்டி நாயம் பேசறீங்க! .. 2023ல இவ்வளவு நல்லவனா நீங்க இருக்கக் கூடாது!
உங்களை ஒண்ணு கேக்கறேன் …நேர்மையா இருந்தா உங்களுக்கு சிலையா வைக்கப் போறாங்க? எதுக்கும் மறுபடியும் நிதானமா
யோசிங்க .. “

ராகவன் மன உறுதி சற்று தளர்ந்தது இப்போது .

“சரி சார் …மொதல்ல எக்செஸ் இருக்கான்னு பாத்துட்டு உங்கள காண்டாக்ட் பண்றேன் …அப்புறம் பாக்கலாம் ..”

” அது …..!மறக்காம பண்ணுங்க .. … இருநூறு ருபாய் செக்ஷன்!… இருபதாயிரம்! … ..பிப்ட்டி பிப்ட்டி.. …! ஆளுக்கு பத்தாயிரம்!..ஓகே?”

போனை வைத்துவிட்டார் பேங்க் கேஷியர்.

2

என்னதான் பணம் லம்ப்பா வருகிறது என்ற சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும் பேங்க் கேஷியரை நினைக்கும் போது ராகவனுக்கு சற்று கடுப்பாய் வந்தது

.ஒரு பொறுப்புள்ள அதிகாரி எப்படி எல்லாம் கிரிம்னலா யோசிக்கிறார் ? …இன்னொருத்தர் பணத்தை பிப்டி பிப்டி பங்கு போட்டுகிறதாம்!! என்ன ஒரு திருட்டு எண்ணம் ..?மிஸ் பண்ணினவனுக்கு என்ன பண நெருக்கடியோ? …யாருக்கு ஆபரேஷனோ? இதிலே
செய்யற தப்புக்கு நம்மை வேற உடந்தையாக்குறார் ..

இப்போது ஒரு பெரிய டுவிஸ்ட் …ராகவன்
மூளைக்குள் இருக்கும் வில்லன் மெல்ல எட்டிப் பார்த்தான்..

அது சரி ……? நாம எதுக்கு பாதி ஷேர் இவருக்கு குடுக்கணும் …? கேஷ் எக்செஸ் இல்லன்னு அடிச்சு விட்டா …இவரால் என்ன கிழிக்க முடியும் ?…

3

மும்முரமாக சம்பள விநியோகம் நடந்து கொண்டிருந்த போது மறுபடியும் போன் கால் வந்தது. போனை எடுத்து ..

“ஹல்லோ…. ராகவன் இயர் ..”

“என்ன ராகவன் ….நான் சொன்னபடி ஒரு செக்ஷன் எக்ஸஸ்ஸா இருந்ததா ?”

“சாரி சார் …நான் உங்களுக்கு போன் பண்ணினேன்… ஒங்க லைன் கண்டினுவஸ்ஸா பிசியா இருந்தது …நீங்க சொன்னா மாதிரி எதுவும் எக்ஸெல் இல்லயே சார் .. “

“விளையாடாதீங்க …சரியா பாத்திங்களா ..?”

“நல்லா பார்த்துட்டேன் …நான் டிரா பண்ணின அஞ்சு லட்சத்துக்கு மேல ஒரு பைசா இல்ல …”

பேங்க் கேஷியருக்கு
டென்ஷனில் முகம்
வியர்த்தது…. ரிலாக்ஸ்டா அமர்ந்திருந்தவர் சட்டென்று நாற்காலியின் முனைக்கு வந்தார்.

“ராகவன்! சீரியசாத் தான் சொல்றிங்களா ? என்ன விளையாட்டு இது ?”

“விளையாடல சார் …
உண்மையைத்தான் சொல்றேன் .”

“ஊ .. ஹும் …நிச்சயம் நீங்க விளையாடுறீ ங்க…. சரி..சரி …எடுத்து வையுங்க என்னோட பிப்ட்டி பர்ஸன்ட் ஷேரை … …நானே நேரா வந்து வாங்கிக்கிறேன்.”

“நீங்க நேரா வந்தாலும் வளைஞ்சு வளைஞ்சு வந்தாலும் ….எக்செஸ் கேஷ் இல்ல …நான் போனை வைக்கிறேன் ..பிசியா சம்பளப் பட்டுவாடா பண்ணி கிட்டிருக்கேன் …அப்புறம் பேசறேன் .. … “

“ஹலோ ….ஹலோ …”

என்று பேங்க் கேஷியர் உரக்க கத்திக் கொண்டிருக்கும்போதே …
கால் கட்டாகி விட்டது ..

4

சம்பள பட்டுவாடா முடிந்தது. . வேலை சுமை குறையவே … சற்று அமைதியாக கொடுத்த காஃபீ கப்பை உதட்டில் வைத்தார் ராகவன் ..

மறுபடியும் போன் கால்….

ஆனால் இம்முறை வேறு புது நம்பரிடமிருந்து …

“ராகவன் ஹியர் …”

“வணக்கம் சார்… என் பேர் மூர்த்தி …நான் இன்னிக்கு ஓ பி சி பேங்கில கேஷ் டிரா பண்ணும்போது ஒரு இரு நுறு ரூபா செக்ஷனை பேங்கில மிஸ் பண்ணிட்டேன் .. கேஷியர் கிட்ட விசாரிச்சப் போ உங்க நம்பரைக் குடுத்து பேசச் சொன்னாரு ..அந்த இருநூறு ரூபாய் செக்ஷன் உங்க கிட்ட தவறா வந்திருக்காப்லன்னு … சொன்னாரு …ப்ரூப்புக்கு நான் என் பேங்க் அக்கௌன்ட் டெபிட் டீடைல்ஸ் சோட நேர்ல வந்து பணத்தை வாங்கிக்கட்டுமா ?”

ராகவன் ஒரு நிமிடம் யோசித்தான் . பிறகு ..

“சார் …..பணம் தவறுதலா என்கிட்ட வந்திருக்கணுங்கறது அவரது ஊகம்.
ஆனா நான் காலையில டிரா பண்ணி கொண்டு வந்த பணத்தில எக்செஸ் எதுவும் இல்ல ..இதை அவருக்கு இன் பாமும் பண்ணிட்டேன்
மிஸ் ஆன பணம் அவர் கிட்டே தான் இருக்கணும் ..! இருக்கணும் என்ன? அவர் கிட்டே தான் இருக்கு …!”

அடித்து பேசினான் ராகவன்

“எக்ஸ்கி யூஸ் மீ சார்…எதுக்கும் …கொஞ்சம் மறுபடியும் ஒங்க கிட்ட செக் பண்ணிப் பாருங்களேன் …”

“லுக் மிஸ்டர் மூர்த்தி…. ..புரிஞ்சுக்கோங்க …எனக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு நான் கொண்டு வந்த கேஷ ஒர்க்கர்ஸுக்கு சேலெரியா குடுத்து முடிச்சாச்சு …தெளிவா சொல்றேன் நீங்க அவர் கிட்ட தான் கேக்கணும் ..நான் போனை வைக்கிறேன் ..”

என்று போனை வைத்து விட்டான்.

5

மூர்த்தி கொடுத்த போலீஸ் புகாரின்படி ராகவன் மற்றும் பேங்க் கேஷியர் இருவரும் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் அன்று மாலையே ஆஜர் படுத்தப் பட்டனர்.

இன்ஸ்பெக்டர் ஒருவர் பின் ஒருவராக விசாரித்தார்.

“என்ன கேஷியர், ராகவன் அந்த இரு நூறு ரூபா செக்ஷனை எடுத்துட்டு போனதை உங்க கண்ணால பாத்ததா நீங்க சொல்றிங்க.ஆனா …அவர் அதை மறுக்கிறார் …
அப்போ அந்த பணம் எங்கே போச்சு?

“நீங்க தான் சார் கண்டு பிடிக்கணும்”

என்றார் கேஷியர்..

“எனக்கு உங்க ரெண்டு பேர் மேலையும் சந்தேகம் இருக்கு …நடந்த உண்மையை நீங்களா சொல்லிட்டா ரெண்டு பேருக்குமே நல்லது …இல் லேன்னா நாங்க விசாரிக்கற விதமே வேற …”

உண்மையை வர வழைக்க இன்ஸ்பெக்டர் அவர் பாணியில் பேசினார்

கேஷியர் மிகவும் பணிவுடன்

“இன்ஸ்பெக்டர் சார்..காலையில ராகவனுக்கு முன்னால மூர்த்திதான் கேஷ் டிரா பண்ணினார் …அப்போ ஒரு இருநூறு ரூபா செக்ஷன் கொஞ்சம் சாயில்ட் நோட்ஸா இருக்கு… மாத்திக்குடுங்கன்னார் நானும் வேற பிரெஷ் செக்ஷனை எடுத்து வைச்சேன் ..அதற்குள்ள ஒரு போன்கால் வரவே அந்த செக்ஷனை எடுத்துக்காமயே பேசிய படியே மூர்த்தி கிளம்பி போயிட்டார். அந்த கேஷ் செக்ஷனைத் தான் தவறுதலா ராகவன் தன்னோட கேஷோட சேர்த்து அவசரத்துல அள்ளிக்கிட்டு போயிட்டார் ..இதான் சார் நடந்தது ..”

ராகவன், இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க ?

“நான் ஒண்ணுமே சொல்ல வேண்டாம் சார் …ப்ளீஸ் இந்த போன் கான்வெர்சேஷன கேட்டா உங்களுக்கே நான் இன்னொசென்ட்டுன்னு புரியும்.”

என்று அவன் போனில் பதிவு செய்த ராகவனுக்கும் கேஷியருக்கும் நடந்த உரையாடலை போட்டுக் காட்டினான் ..அதில் கேஷியர் ராகவனுக்கு கொடுத்த பிப்டி பிப்டி ஆபர் டீலும் அதற்கு ராகவன் சம்மதிக்காதது அனைத்தும் வார்த்தைக்கு வார்த்தை பதிவாகி இருந்தது …
இதை கேட்ட இன்ஸ்பெக்டர்,

சரி…ராகவன், கேஷியர் நீங்க ரெண்டு பேரும் போகலாம் ..எங்கேயோ லேப்ஸ் இருக்கு ..அதை கண்டு பிடிக்க எனக்கு ஒரு நாள் டைம் வேணும் …ஓகே ?

“இன்ஸ்பெக்டர் சார் அப்போ என் பணம் கிடைக்குமா கிடைக்காதா ?”

என்று கேட்டான் மூர்த்தி ..

“மிஸ்டர் மூர்த்தி …உங்க பணம் எங்கேயும் போகாது ..தைரியமா இப்போ போயிட்டு நாளைக்கு ஈவினிங் என்னைப் பாருங்க”

என்றார் ..

மறுநாள் ராகவனை அவர் ஆபிசில் இன்ஸ்பெக்டர் சந்தித்து,

“பேங்க் பணம் இருபது ஆயிரத்தை கையாடல் பண்ணின குற்றத்திற்காக உங்களை கைது பண்றேன்”

என்றார் .

அதிர்ச்சி யடைந்த ராகவன்,

“இன்ஸ்பெக்டர் சார்…இதென்ன திடிர்னு எந்த ஆதாரத்தை வைத்து நாந்தான் குத்த வாளின்னு சொல்றிங்க?”

வெரி சிம்பிள் மிஸ்டர் ராகவன் …பேங்கில் கேஷியர் சீட்டுக்கு எதிரே பிக்ஸ் ஆன சி சி டிவி கேமிரா புட்டேஜ வச்சுத்தான் சொல்றேன் …அதை வாச் பண்ணத்தான் ஒரு நாள் டைம் எடுத்துக்கிட்டேன் …நீங்க கேஷியர் டேபிள்ள தனியா வச்சிருந்த இரு நூறு ரூபா செக்ஷனை எடுக்கறது, அதை உங்க பேகுக்குள்ள மத்த கேஷ் பண்ட லு க்கு இடையே செருகுறது எல்லாமே கேமிராவுல தெளிவா ரெக்காட் ஆயிருக்கு …நீங்க இனிமேலும் பொய் சொல்லி நடிக்க முடியாது ……ஜீப்ல ஏறுங்க”

என்றார் சிரித்துக்கொண்டே .