டாக்டர் வள்ளுவர்/டாக்டர் எஸ் . முருகுசுந்தரம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்


நம் மனமென்னும் மலரில் மாசற்ற இறைவன் வீற்றிருக்கிறான்
என்ற எண்ணமே மன இறுக்கம் தளர்த்தி மகிழ்வையும், மன
நிம்மதியையும் தந்து இவ்வுலகில் நோயின்றி நீண்டகாலம் வாழத்
துணை செய்கிறது.

உடல் நோய்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மன
அழுத்தமே. உயிர்வளியாகிய ஆக்ஸிஜனின் இணை திறன்
(VALENCY) இரண்டாக (O2) இருக்கும் போது, அது உயிர் வாழ
இன்றியமையாத ஒன்றாகிறது. அதே உயிர்வளியின் இணைதிறன்
ஒன்றாக (O) மாறும் போது, அது “வினைபுரி உயிர்வளியினம்”
(REACTIVE OXYGEN SPECIES) என்ற, உயிரைக் கொல்லும் நச்சுப்
பொருளாகி விடுகிறது. உயிர் வாழ இன்றியமையாத உயிர் வளி,
உயிரைக் கொல்லும் நச்சுப் பொருளான வினை புரி உயிர்
வளியினமாக மாறி, உடல் முழுதும் பெருகுகுவது மன
அழுத்தத்தால் தான், என்பதை உறுதி செய்கின்றன நவீன மருத்துவ
ஆய்வு முடிவுகள்.

உயிர்வளியையே நஞ்சாக மாற்றும் மன அழுத்தத்தை நீக்குவது
எப்படி? மன அழுத்தம் நீக்கும் மருந்துகள் ஏதும் மண்ணுலகில்
இல்லை. இன்னல்களைத் தீர்க்கவல்ல இறைவனே நம் மனதில்தான்
குடி கொண்டுள்ளான் என்ற எண்ணம் மட்டுமே, இறுகிய மனத்தை
இலகுவாக்கி மன ஆறுதல் தந்து மன அழுத்தத்தை நீக்க வல்லது.
அதுவே மன இறுக்கத்தால் உடல் முழுவதும் பெருகிய நச்சுப்
பொருளை முறிக்கும் மாமருந்தாகிறது.

எனவே, இவ்வுலகில் நோயின்றி நலமுடன் நாம் நீண்ட காலம்
வாழ, நம் உள்ளத்திலேயே எல்லாம் வல்ல இறைவன்
உறைகின்றான் என்ற நம்பிக்கையே மாமருந்து என்கிறார்
நல்லாசிரியர் திருவள்ளுவர்…

THE FLOWER OF THE HEART IS WHERE THE FLAWLESS LORD

DWELLS…

THAT BELIEF ENSURES LONG HEALTHY LIFE, AS AN ANTIDOTE

OF TOXIC STRESS…