– .

நூல்; மூன்று முகங்கள்.
கதைச்சுருக்கம்:
ஜானகியும் வெங்கட்ராமனும் தனியாக வாழும் முதியவர்கள். தினமும் நடைப்பயிற்சி செய்பவர்கள். அறிமுகமாகிறார்கள் பார்க்கில். நல்ல நட்பு வளர்கிறது.
ஒருநாள் வெங்கடராமன் நடைப்பயிற்சிக்கு வரத் தாமதமாகிறது. அதற்கான காரணத்தை ஜானகி வினவுதலாக கதை துவங்குகிறது, மகளும் பேரனும் வந்திருப்பதாகவும் ஒருமாதம் இருப்பார்களென்றும் சொல்கிறார் வெங்கட்ராமன்.
வெங்கட்ராமன் மனைவி சீதாவை இழந்து பிறந்து வளர்ந்து வாழ்ந்த சென்னையை விட்டுச் செல்ல மனமில்லாமல் வாழ்கிறார் ,ஜானகியும் கணவர் 55 வயதில் திடீர் மாரடைப்பில் இறந்துவிட மகனோடு டெல்லி செல்ல மனமிலாது வாழ்கிறார்.
ஜானகியின் மகனும்,மருமகளும்.பேரக் குழந்தைகளும் வந்திருக்கிறார்கள். வெங்கட் ராமன் தன் வீட்டிற்கு ஜானகியின் மகன் சுரேஷின் குடும்பத்தை அழைக்கிறார். அப்படி அவர்கள் சென்ற போது வெங்கட்ராமன் மகள் உஷாவிற்கு இவர்களைப் பிடித்துப் போகிறது.
அதே நேரத்தில் சுரேஷுக்கும் அமெரிக்கா செல்ல இரண்டு ஆண்டு காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது. அதன்பின் இவர்கள் எடுக்கும் முடிவு அதைப் பெற்றவர்கள் ஏற்பது என முடிகிறது கதை.
கதைக்களம்; பார்க், வீடு, உணவகம்.
கதைச் சூழல் ; சமுதாயச் சூழல். கதை மாந்தர் சூழல்.
சமுதாயச் சூழல்;
1. பிள்ளைகள் பணி நிமித்தமாக வெளியூரில் அல்லது, வெளிநாட்டில் வாழ்வது. பெற்றோர் உடல்நிலை காரணமாகவும், விருப்பம் காரணமாகவும் தனித்து வாழ்வது. அது பெரும்பாலும் முதியோர் இல்லங்களாக இருப்பது.
2. இளைஞர்கள் ‘லிவிங் டுகெதர்’ எனும் முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது.
கதை மாந்தர்;
முதன்மைப் பாத்திரங்கள் வெங்கட்ராமன், ஜானகி.
துணைப்பாத்திரங்கள் சுரேஷ், உஷா.
கதை மாந்தர் சூழல்;
வெங்கட்ராமனுக்கும் ஜானகிக்கும் அன்பான பிள்ளைகள் இருக்கிறார்கள். உடல் நலனும் நன்றாக இருக்கிறது. பிள்ளைகள் மீது அளப்பரிய பாசம் உள்ளது. ஆனாலும் சென்னையை விட்டும், கணவரோடு வாழ்ந்த வீட்டை விட்டும் போக மனமின்றி தனியாக வாழ்கிறார்கள்.
கதைக்கரு;
தனிமைக்கான தீர்வு.
கதைப்போக்கு; நேர்கோட்டில் செல்கிறது.
கதைக் கரு– தனிமைக்கான தீர்வு.
கதைப்போக்கு; பூங்காவல் துவங்கி. வீட்டில் வளர்ந்து உணவகத்தில் நிறைவு பெறுகிறது.
புரட்சி;
அதாவது அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் என்ற முறையில் வாழப் போகிறார்களா?
அல்லது
தோழமையாக அதாவது நண்பர்களாக வாழப் போகிறார்களா?
என்பதை வாசகர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார் கதாசிரியர்.
எளிய நடையில் மரபு மீறாதது போல் ஒரு புதிய தீர்வை, வழியைச் சொல்லி முடித்து பாராட்டு பெறுகிறார் குமுதா ஸ்ரீனிவாசன்.
