
செயற்கை விந்தக
செப்படி வித்தையால்
ஒப்பில்லா
இயற்கை எதிர் இனச்
சேர்க்கையால்
தாயகம்
இன்றொரு
மாற்றாந் தாயகம்
எங்கு நோக்கினும்
செங்கோல் ஓச்சிடும்
தைனான் தொட்டு
ஐ.ஆர்.எட்டு
நெற்பயிர்.
ஜஃப்னாத்
தென்னை.
அல்சேஷன்
நாய்.
ஒயிட்லெகாண்
கோழி.
ஸ்விஸ் சாம்மை
மாடு.
யார்க்ஷயர்
பன்றி.
என்பன போன்று
இன்னும் பலவும்
பார்க்கலாம் அங்கு
இனி
இல்லந்தோறும்
செல்லம் கொஞ்சிட
ஜெர்மன்
அல்லது
ஜப்பான் குழந்தைகள்
எப்போது வருமோ!
