டாக்டர் கொடுத்த டைரி/அழகியசிங்கர்

துளி – 174

வெள்ளிக்கிழமை அன்று டாக்டர் ஜெ.பாஸ்கரன் எனக்கு ஒரு டைரி கொடுத்தார். அந்த டைரியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. அதில் எதாவது எழுதி அதன் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டாமென்று தோன்றுகிறது.

நான் பல ஆண்டுகளாக டைரி எழுதி வருவேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக டைரி எழுதிக்கொண்டு வருகிறேன். முன்பெல்லாம் என் பெயரை அச்சடித்து லஙூதா ஜøவல்லரி சுகுமாரன் டைரி கொடுப்பார்.

2016 ஆண்டு வரை டைரியைக் கையால் எழுதிக்கொண்டிருந்தேன். 2017ல் இல்லை. அதன் பின் எனக்கு டைரியே கிடைக்கவில்லை. அதனால் கம்ப்யூட்டரிலேயே டைரியைப் பதிவு செய்தேன். ஒருநாள் பதிவு செய்யாவிட்டால் எல்லாம் மறந்து விடுகிறது. என்ன யோசித்தாலும் ஞாபகத்தில் சொண்டு வர முடியாது. சிலசமயம் அலுப்பாகவும், சிலசமயம் வெறுப்பாகவும் இருக்கிறது.

இதோ டைரி கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்து 4 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த டைரிகளையெல்லாம் பிரிண்ட் செய்து மூடிய புத்தகம் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறேன். 4 பிரதிகள் மட்டும்தான். யாருக்கும் தெரியாது. என் வீட்டில் புத்தகம் படிக்கும் நல்ல பழக்கம் யாருக்கும் இல்லை என்பதால் என் டைரியையும் யாரும் படிக்க மாட்டார்கள். நண்பர்களைப் பற்றி எழுதியிருப்பதால் நண்பர்களிடம் தவறிப்போய்க் கூட காட்ட மாட்டேன். எப்பாவது எடுத்துப் படித்தால் சுவாரசியமாக இருக்கும்.

                                                                                                                                                                                                                                                                        +++++

டாக்டர் இன்னொன்றையும் கொடுத்தார். அவருடைய சிறுகதைத் தொகுப்பை. விருட்சத்தில் பல கதைகள் வந்திருக்கின்றன. வரும் விருட்சம் இதழிலும் ஒரு கதை வரப் போகிறது.

எனக்குத் தெரிந்து மூன்று எழுத்தாள நண்பர்கள் கதைகள் எழுதிக் குவிக்கிறார்கள். அதில் சிந்துஜா முதலிடம் வகிக்கிறார். சிந்..என்று சொன்னாலே போதும் கதை எழுதி விடுவார். அடுத்த இடத்தில் உஷாதீபனும், டாக்டரும்.

நல்ல முறையில் ‘கிணற்றுக்குள் காவிரி’ என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பான்ட் தேர்வு ஒரு புத்தகத்திற்கு முக்கியமானது. இப்புத்தகத்தில் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. ஆயிரக்கணக்காகப் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டிருக்கும் ஒரு புத்தக நிறுவனம் தயாரித்த புத்தகத்தைப் பார்த்தபோது எனக்குத் திருப்தி இல்லாமலிருந்தது.

நான் இனிமேல்தான் டாக்டருடைய புத்தகத்தை மொத்தமாகப் படிக்க வேண்டும். அதற்கு முன்னால் என் மனைவி படித்துக்கொண்டிருக்கிறாள். ஒரு சிறுகதைக்குப் பரிசு கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. சமீபத்தில் அதிகமாகப் பரிசு பெறுபவர். டாக்டர். இலக்கியப் பீடம் டாக்டர் கதைக்கு முதல் பரிசு கொடுத்து கௌரவம் செய்திருக்கிறது.

மணல்வீடு பதிப்பகமும் இரண்டு சிறுகதைத் தொகுப்பும் 4 கவிதைத் தொகுப்புகளும்⁹ தயாரித்திருக்கின்றன.

28.02.2021

துளி – 174

டாக்டர் கொடுத்த டைரி

அழகியசிங்கர்