
குரங்கிலிருந்து பிறந்ததொன்றும்
நம் குற்றமில்லை….
அதன் குணத்தைவிட மறுப்பதுதான்
மனிதமனத் தொல்லை.
கல்லில் வடித்த சிற்பத்திடம் எழில்
வடிவமில்லை….
அதனைக் கலையென்று ஏற்றுக்கொள்ள
தடையொன்றுமில்லை…
நம்மைவிட மூத்ததுதான் காலம்
தெரியவில்லை….
அதன் வாலைத்தொலைத்ததுதான்
பரிணாமத்தின் எல்லை.
சிலை சிதைந்து போனாலும் சீற்றம்
குறையவில்லை…
சொல்புதிதில் இணைவதற்கு அதற்கு
எந்த விதியும் இல்லை.
விருட்சத்தில் ஏறிவிட்டால்
இறங்கவழியில்லை….
அதில் கவிக்கூட்டம் அதிகமென்றால்
மறுப்பதற்கு இல்லை.
♦
