பெருமாளே சரி தானா?/முருகு

சிதைத்தது யார் பெருமாளே?
வதைத்தது யார் உன் வதனத்தை?

அந்நியனா?, அக்கம் பக்கத்தவனா?
அடிக்கடி மாறும் தட்ப வெப்பமா?

மஞ்சளும் குங்குமமும்…
மலர்கள் ஒன்றிரண்டும்…

வீசியெறிந்து உன் மேல்
வேண்டும் வரம் கேட்க வரும்…

பொறுப்பில்லா மாக்களையும்…
பொறுமையாகக் காக்கின்றாய்!

மடி மீது அமர்ந்திருக்கும் உன் செல்வ
மனையாளும் சினம் கொள்ள வில்லை!

காக்கும் கடவுள் நீ…
காப்பார் யார் உன்னை?…