இருட்டுக்கும் மனதுக்குமான சண்டையில்
அமைதிக்கும் சத்தத்திற்கும்
இடையிலான மோதலில்
மரணங்கள் விட்டுச் சென்ற பேரதிர்வுக்கும்
வாழ்க்கைக்குமான போராட்டத்தில்
அவனை அவனே சமைத்துக் கொண்ட
உருவம்
ஆறுதலுக்காய் சில சடங்குகள்
சம்பிரதாயங்கள்
பெற்றுவிட்டதாக எண்ணும்
தன்னம்பிக்கையும் வாழ்தலின் சாரமும்
கால வெள்ளத்தில் அர்த்தமற்றுப்
போய்விட்டன
தற்கொலைகளின் எண்ணிக்கையில்.
-
