கேள்விக்காரன்‌கவிதை

காலைப் பொழுது
பெரும் பரபரப்பு
நெடுஞ்சாலையில்
ஓரமாய்
தொழுநோய் தாக்கிய
ஊன மனைவியை
நான்கு சக்கர
இரும்பு உருளை
சகடத்தில்
தோள்
வடம் கட்டி
இழுத்துச் செல்லும்
தொழு நோய்
கணவன்.

கடவுள்
சபித்த
வாழ்க்கை
இணை

கோவிலில்
இணை கடமை
உணர்த்தும்
ஊன சிலை ‌.

கடவுளை
எவர்
சபித்தது?
சிதைத்தது?
உடைத்தது ?

01/03/2023
காலை மணி :10:23