
கல்லுக்குள்
தான் கண்ட உணர்வை
கலையழகோடு
வடித்தான் சிற்பி!
காப்பார்கள் சிற்பத்தை
பின்னால் வருவோர்கள்
என்றே நம்பினான்;
உலக அரங்கில்
சிற்பங்களை
உயர்ந்த விலை கொடுத்து
வாங்குவோர் உளர்!
உள்ளூர்க் காரர்களின்
சிதிலமடைந்த மனசுகளால்
சிதிலமடைந்த சிற்பம்
சீர் பெறவே இல்லை!
ஒரு வேளை சிற்பி
மீண்டும் ஒரு பிறவியில்
சிற்பியாகவே வந்து நின்றால்
சிதிலமடைந்த மனசுகளை
சரி செய்ய
ஓர் உளியைத் தேடுவான்!
