98வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்திய கவிதை நூல்
சமீபத்தில் நடந்த 98வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் (03.03.2023) ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன்.
அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது என்ற பெருந்தேவியின் புத்தகம்தான் அது.
எழுத்து பதிப்பகத்தால் இப் புத்தகம் மிக அருமையாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
கையட்டகமாக உள்ளது. 100 பக்கங்களுக்குள்ள இந்தப் புத்தகத்தின் விலை : ரூ.120.
இதிலிருந்து ஒரு கவிதையை வாசித்தேன். அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
பொறுப்பற்ற இன்னொரு எழுத்தாளர்
எழுதித்தான் எதையும் தாண்ட வேண்டும்
என்றார் அசோகமித்திரன்
தாண்டும்போது தடுக்கி விழுந்தால்
யாரைக் கூப்பிடுவது?
தம் பிடித்து குளத்தைத் தாண்டும் பாவனையில்
கடலைத் தாண்ட முடியுமா?
ஐம்பதாவது முறை தாண்டும்போது
தள்ளும் நாக்கை அறுத்தெறிவது எப்படி
துளைக் கேள்விகளைக் கேட்பதற்குமுன்
சொல்லாமல் கொள்ளாமல்
போய்விட்டார்
பொறுப்பற்ற எழுத்தாளர்களுக்கு
ஏதோ சொர்க்கமே கிடைத்துவிடுவதைப் போல
பெருந்தேவி முதல் கவிதை விருட்சத்தில் பிரசுரமானது.