
(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட
கவிதை)
மெல்லிய பனிப்படலம் திரை
விரித்திருக்க
தார்ச்சாலையில் வழுக்கிக்
கொண்டு
ஓடியது மகிழுந்து.
மினுக் மினுக் என மினுக்கிக்
கொண்டிருந்த
நட்சத்திரங்களின் நடுவே
பாதிநிலா வீதியுலா.
கடை மூடும் நேரம் கடைசி
விற்பனை
தள்ளுபடி உண்டு் என்றே
வெண்மேக
அறிவிப்பு, வானமகள் உத்தரவு.
திட்டமிட்ட பெங்களூர்ப் பயணம் .
உலகளந்த
பெருமாள் கோவிலூர் கடந்து
அண்ணாமலை
கோபுர தரிசனத்தில் தொடர்ந்தது.
கதிர் உதயம் கண் நிறைக்க
மோன லயம்
மனம் மெழுகிய வேளை
அலைபேசிச்
சிணுங்கல்
மலரிதழ் தொடுதல் போல்
மெல்லிய
பேச்சு முடித்து,’ திரும்புவோம்
நாளையே’
என்னவர்.
இதுநேற்றைய செய்தி.
இன்று
அதே விடியலில் எழுந்து,
‘அவசரமாய்த்
தரையிறங்கிய விமானம் போல்
கடலூர்
சேர்ந்தும் ஆனது தாமதம்.
மின்மயானம் தேடிச் சென்று
காணாது,
அவசரத்தில் தவற விட்ட
அலைபேசிக்கு
நொந்து வீடுபோய்ச்
சேர்ந்தபோது
வரவேற்றது அன்னையின்
இமையாவிழி.
விழிஈரம் அவள் பாதம்
வீழ்ந்தபோது
‘பத்துக்கு எடுக்க வேண்டியது
யாருக்காகக்
காத்திருந்தாளோ தூக்குங்க
என்றார் ஒருவர்.
நண்பரின் இல்லத்திலிருந்து
புறப்பட்டது
அமரர் ஊர்தி
பதினொன்றுக்கு.
