படித்தல்/எஸ்ஸார்சி

(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட
கவிதை)

கொரியா பெருந்தொற்றை
அவிழ்த்து விட்டு
உலகத்தை ஸ்தம்பிக்க
வைத்தது எவர்?
நம்பி நாராயணன் அறிவியலார்
பட்ட பாட்டை நாடறியும்.
மருத்துவத்துறை மீது மக்களின்
நம்பிக்கையோ
நீர்த்துப் போய்.
இருமலுக்கு மருந்து
ஆப்ரிக்க ஏற்றுமதி
எழுபது குழந்தைகள் இறப்பு
இந்திய மருந்தாளுமையின் அவலம்.
குஜராத்தில் மர்பி பாலம்
சாமிகும்பிட்ட சனம்
ஜல சமாதி மொத்தமாய்
புட்டினுக்கம் ஜெலன்சிக்கும்
என்னய்யா சண்டை
யார் பெற்ற வீரர்களோ
பலி இரண்டு லட்சம்.
படித்தவனே பொய் சொல்கிறான்
படித்தவனே திருடுகிறான்
படித்தவனே பாவம் செய்கிறான்
எழுத்தறிவித்தவன் இறைவனாய்
இல்லை
படித்தலில் என்னவோ கோளாறு.