
பூப்பூத்த மறுநாளே
காய்காய்க்கும் கல்யாணம்
புடவைக்குள் தொலைந்திட்ட
தாவணியின் விளையாட்டு
வேர்விட்ட செடிக்கிங்கு
விழுதுகளின் பொறுப்புகள்
விளக்குக்கு ஏற்றிவிட்ட
சூரியனின் சுடுநெருப்பு
இறப்புக்குத் தப்பித்து
இருக்கின்ற பெண்ணிவளின்
இளமையினைப் பலியாக்கும்
இரக்கமில்லாக் கிராமங்கள்

இதுதான் கிராமத்துப்பெண் நிலையா?
கவிதை அருமை.
ஆனால்
பழங்காலங்கள்
என்று இருந்தால் கவித்வம் கூடும்.