விசையுறு பந்தினைப் போல்…/எஸ் வி வேணுகோபாலன்

இசைப் பலகை
ஹார்மோனியம் போல்
ஈர்க்கவும்
மும்பை நேரு அறிவியல் மையத்தில்
கறுப்பு வெள்ளை
வெள்ளை கறுப்பு
முன்னாக நடை போட்டு
இசையில் ஆழ்ந்து
திடீர் என்று ஏனோ
கால்களைப்
பின்னோக்கி வைத்துக்
கறுப்பு கறுப்பு கறுப்பு
வெள்ளை
வெள்ளை
……
…..
நொடி நேரம்
நிலை தடுமாறி
விசைப் பலகையாகிப் போன தடத்தின் குறுக்கே
பின்புறம் சாய்கையில்
பிடிமானம் அற்றுக்
குப்புற விழுந்து
தரையில் ஊன்றிய
இடது கை
மொத்த உடலின் வலுவும் தாங்க மாட்டாது

படார் என்று எலும்பில்
நுண்ணிய பகுதியை
இலேசாக உடைத்துக் கொண்டது

இராவணன் கை வீணை நரம்பு போலவும்
இசையின் இடை நிறுத்தமாக…

கொஞ்சம் ஓய்வுக்காக…

இன்னும் கொஞ்சம்
கவிதைகளுக்காக!

26 Comments on “விசையுறு பந்தினைப் போல்…/எஸ் வி வேணுகோபாலன்”

  1. வலியிலும் கவிதை புனையும் வேணுவின் பலம், இறைவன் கொடுத்த வரம்.
    ஆனாலும் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம் தம்பி.

  2. நிலைதடுமாறி கீழே விழுந்ததையும் கவிதைத் தூறலாக்கும்
    எம் தோழர் எஸ்விவி
    உயர் உயரப் பறக்கிறார்..!

    1. விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் அல்லவா தங்களுக்கு விரைவில் குணமடைவீர் .

  3. ஒரு விபத்தினைக்கூட நகைச்சுவையுடன் இதிகாசம் சேர்த்துப்பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.
    மன்னிக்கவும்.
    வாணி ஜெயராம் பாடல்கள் பற்றியகட்டுரைக்கு பாராட்டு மாதிரி இதற்கு எழுத முடியவில்லை.
    நலம் பெற வேண்டுகிறேன்.
    பின் உள்ளன கட்டுரை கவிதை எல்லாம்.

  4. என் போன்ற ரப்பர் மரங்களுக்கு இது போன்ற கீறல்கள் வாடிக்கை.
    உமைப்போன்ற தேக்கு மரத்திற்குமா

    இந்த சோதனை .
    விரைவில் நலம் பெற விழைகிறேன்.

  5. இது என்ன கஞ்சத்தனம்?
    கொஞ்சம் கவிதைகள்

    வாரி வழங்குங்கள்
    அண்மைக்கால மாரியைப் போல !

  6. இப்படிக் கவித்துவமாக எழுதுவதற்கென்றே கீழே விழுந்தீர்கள் போலும்.

    எனினும் விரைவில் எழுவீர்கள் என்ற நம்பிக்கையோடு.

    ஆறுமுகம்
    நெல்லை.

  7. அன்பின் ஊற்று சற்று அதிகமானதால் ஏற்பட்ட சிறிய விபத்து. திறம்பட எதிர்கொண்ட தருணம். விரைவில் நலம் பெறுவீர்.
    மணமக்களே தங்களை மிகுந்த அக்கறையுடன் கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். கவிதை தான் உயிர் மூச்சு . உண்மை.
    நிதானமாக தொடர்பு கொண்டு பேசவும்.

  8. Get well soon SVV.
    I pray for you for speedy recovery 🙏
    பட்ட அடியிலும்
    துடித்த வலியிலும்
    உன்னை மறந்த நேரம்
    கவிதை வடித்தது
    மெச்ச வைக்கிறது

  9. அப்பப்பா. வலியை‌ மறக்கடிக்க த்தான் கவிதை மழையோ? ‌‌
    சீக்கிரமே‌ குணமடைய கடவுளைப்பிரார்த்திக்கிறேன்.

  10. எல்லோரும் இன்புற்று
    இருப்பது அன்றி
    வேறொன்றும்
    அறியாத
    வெள்ளை உள்ளம்!
    உங்கள் உள்ளம்! தோழர்!
    அனைத்தையும்
    கவிதையாக்கும்
    கவிதை உள்ளம்!
    விரைவில் நலம் பெற
    வாழ்த்துக்கள்!

  11. கொண்டாட்டங்களுக்கான நேரத்தில் விபத்து சோகமானது. தேவையான ஓய்வை எடுத்துக்கொள்ளுங்கள். குணமடைந்து நலமுடன் சந்திப்போம் நாம், விரைவில்.

  12. தோழர்களின் வாழ்த்துக்கள் மிக பலமான சத்துணவு போல் இருக்கிறது இறைவன் அருளால் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்

  13. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்..உடல் நலம் காப்பது அவசியம் தோழர்…
    விபத்தைக்கூட கவிதை விளையாட்டாய் கடந்து போகும் மனப்பான்மை உள்ள தோழருக்கு..கட்டாய ஓய்வு.. விசையுறு பந்திற்கு..
    சிறிது ஓய்வு அவசியம்…
    மீளப்பாயக் காத்திருப்பு..
    சீறிப்பாய விரைவில்
    நலம் பெறுவார் தோழர்…👍💐

Comments are closed.