
அவிழும் மனதில் அகிலம் மகிழ
அன்பில் விரியும் பாதையிவள்
விழிக்குள் விழுந்து உயிரை அடைய
விரியும் சொர்க்கக் காதலிவள்.
உறவைப்பகிர உள்ளம் சிரிக்கும்
உன்னதத்தின்கோவிலிவள்
இயக்க உலகு அசைவில் சிறக்க
இசைக்கும் சலங்கையோசையிவள்
வியர்வைத் துடைக்கச்சேலையாகி
விசிறிப்போகும் அன்புயிவள்
பூக்கும் மனிதன் இதழ்கள் சிரிக்க
பூவாய்த்தாங்கும் காம்புயிவள்
ஆணையும் தன்னுள் சுமந்து ஈன்ற
ஆகச்சிறந்த படைப்புயிவள்
ஆணை ஆணாய் உணரவைத்த
ஆற்றல் மிகுந்தப் பெண்மையிவள்
🌹
