HAPPY WOMEN’S DAY!

மையப்புள்ளியவள்
அண்ட வெளியுமவள்
பாசப்புனலவள் பல்லுயிர்க்கும்
நாசப்புயலவள் தீமைக்கு
ஊசி முனைத்தவம்
முனையிலே ஈரேழுலகு
ஈசன் உள் உறைய
இவளோ ஈஸ்வரியானாள்
அவன் அர்த்த நாரீசுவரன்
முக்கண்ணனின்
மூன்றாவது கண்ணானவள்
மண்ஈன்ற பெண்ணவள்
விண்ணாள விரைகின்றாள்.
8/3/2023
