பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
‘ப்ளம் மரத்தடியில் நிலவொளியில் நனையும் பெண்” மரச்செதுக்கு ஓவியம் யோஷிட்டோஷி

31
வானம்பாடியைவிட
உயரமாக மிதக்கிறது
ஹோஸோ மலைப்பாதை
32
கதிர்க்குருவி
முற்றத்தில் காயும்
அரிசிஉருண்டைகளில் புள்ளியிடுகிறது
33
அடுப்புக்குத் தப்பிய
பூனை
இடைவெளிச் சூட்டில் கத்துகிறது
34
பூனை மியாவிட்டு முடிந்த பின்
படுக்கை அறையை
நிலவொளி தொடுகிறது
35
புதருக்குள்
பூத்திரளும்
ப்ளம்மை மறந்துவிடாதே
36
வசந்தகாலக் காற்று
நிலவைச் சூழ்கிறது
ப்ளம்மின் வாசனை
37
மலைப்பாதை
சூரியன் எழுகிறது
ப்ளம்மின் வாசனையினூடே
38
இன்னொரு ஹைக்கூ?
இன்னும் செர்ரி பூத்திரள்கள் இருக்கின்றன
-என்னுடைய முகமல்ல
39
தூங்கும்
காற்றாடி மரம்
இரவின்னிசைப் பறவையின் ஆத்மா
40
கன்னியரின்
வீடுகளுக்குப் பின்னே
ப்ளம்மின் ஒற்றைப் பூத்திரள்