
ஓர் எறும்பைக் கொல்வது
மிகமிக சுலபம்…
ஒரு பட்டாம்பூச்சியைக்
கொல்வது மிக சுலபம்..
ஒரு பறவையைக்
கொல்வதும் சுலபமே..
ஒரு மனிதனைக்
கொல்வதும் சுலபந்தான்..
இப்படியாக எதைக் கொல்வதும் சுலபமே..
கொல்வது என்ற ஒன்றைக் கொல்வதுதான்
வாழ்விற்கும் சாவிற்கும்
இடையில் ரொம்பக் கடினமாயும் கறையாகவும்…
