
~
கிளைக்குக் கிளை
தாவிப் பற்றுது
சாக்குருவி-
இலக்கு புரியவில்லை.
சின்னக் கண்களில்
எந்தச் சொற்களும்
இல்லை-
வாசித்து விளங்கிக்
கொள்ள ஏதுமில்லை-
தப்பிக்க இடந்தேட
வகையின்றி
என்ன குழப்பமிது?
தூரத்து ருத்ரபூமியில்
வரிசையாய் இடங்கள்
புல் பூண்டுகளோடு-
அதிசயங்கள்
நிகழ்வதுண்டு
அவ்வப்போது-
சாக்குருவி போனஇடம்
தெரியவில்லை
வெகு நாட்களாய்.
பூமியின் கனம்
அபரிமிதமாய்-
சுழற்சியும்கூட
மெதுவாய்த்
திணறித் திணறி-
கோபுரமணி
ஒலித்தது வேறாய்-
எங்கும் குரலற்ற
மௌனம்-
கருப்புக் கோடாய்
கீழ்வானில் மின்னல்-
எங்கிருந்து வந்தது
பளிச்சென
சாக்குருவி-
சற்றே சிரிப்பும்கூட.
நகர்ந்தன காலடிகள்
தாமாகவே
தீச்சுவாலை
